பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34. திருவருட்யா.

(அ செ.) பொருது,- பொறுக்காமல்; ஒறுத்தாலும், தண்டித்தாலும்.

(வி - ரை.) இந்தப் பாடல் கருத்தை ஊன்றிப் பார்க்கை யில் திருவாசகத்தில் வரும் 'இருந்தென்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றிவை என்னும் வரியும்,

அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனேயாய் என்னைஆட் கொண்ட போதே

(கொண்டிலையோ

இன்ருேர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண்

(எம்மானே

நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே

என்னும் பாடலும் நம் நினைவில் வருகின்றன. (80)

சேல்வரும் ஏர்விழி மங்கையங் காஎன் சிறுமைகண்டான் மேல்வரும் தீவரத் தாழ்த்தாலும் உன்தன் வியன் அருள்பொன் கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணில்மடிப் பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.

(பொ. ரை.) சேல் மீனப் போன்ற அழகிய கண்ணே யுடைய உமாதேவியை இடப்பக்கத்தே கொண்ட மீனட்சி சுந்தரேசனே என் துன்பத்தைக் கண்டு நீ வரத்தாழ்த்தால் உனக்கு முன்னே உன் தரும விடை வருமே. அல்லது உனது பரந்த அருள் வடிவான அழகிய திருவடிகள் வருமே. இளங்கன்று அழுவதைத் தாய்ப் பசு கண்டால் அப்பசுவின் மடியில் பால் சுரக்குமே. குழந்தை அழக் கண்டால் பெற்ற, தாய்க்கு முலையில் பால் தானே வருமே. (எ . து.)

(அ - சொ.) சேல் - சேல்மீன். ஏர் . அழகு. சிறுமை . துன்பம் ஆன் - இரடபம். வியன் - பரந்த பொன் . அழகிய, பாவை - பதுமை போலும் அழகுடைய தாய்,