பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் (மறையீடு 3每

(இ.கு.) வியன் - உரிச்சொல். பாவை, உவமை ஆகுபெயர். கண்டு+ஆன் + மேல் + வரும் எனப்பிரிக்க.

(வி. ரை.) இறைவி மீனுட்சி என்னும் பேருடையவள். அந்தக் குறிப்பே ஈண்டுச்சேல் வரும் ஏர் விழிமங்கை எனப் பட்டது. அடியவர்கட்கு அருள் செய்ய இறைவன் தரும தேவதையாம் எருது மீது வருவன் ஆதலின் ' ஆன் மேல் வரும் ' எனப்பட்டது. தாய்க்கும் சேய்க்கும், கன்றுக்கும் ஆனுக்கும் உள்ள அன்புத் தொடர்பை கீழ்வரும் வரிகளில் நன்கு உணரலாம்.

இல்லா முலைப்பாலும் கண்ணிரும் ஏந்திழையால்

நல்லாய் உளவாமால் ' என்பது சிவஞான போத வெண்பா,

இல்லபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு

முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலை விளம்பக் கொங்கை சுரந்த அருள் கோமகளோ " என்பது நால்வர் நான் மணி மாலை.

" காதுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் களைப்பச் சோர்ந்த பால் ' என்பது கம்ப ராமாயணம்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்சொரியும் ' என்பது தனிப் பாடல் திரட்டு. இந்தக் கருத்துகளைக் கொண்டே நம் ஐயா * இளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின் மடிப்பால் வருமே முலைப்பால் வருமே பெற்ற பாவைக்குமே ' என்றனர். (31)

வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநீன் பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம் துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் துயநெஞ்சம் என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.