பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருவருட்பா

(பொ. ரை.) வன்மை மிக்க மதுரையில் பெருமை வாய்ந்த வையை ஆற்றில் வெள்ளம் திரண்டபோது கரைகள் உடைப் பெடுத்ததனல், கரையினைக் கட்ட நீ ஈடுபட்ட போது, உன் பொன்னிறமான திருமேனியில் பாண்டியன் அடித்ததனுல் புண்பட்ட போதில் ஐயோ! உலகத் தொடர் பாம் துன்பங்களை ஒழித்த வீரராம் மாணிக்க வாசகருடைய துரய உள்ளம் அப்போது என்னபாடு பட்டதோ ? இப் பொழுது நான் கேட்கும் போதே என் மனம் துன்புறுகிறதே." *(st - gy.)

(அ - சொ.) கூடல் - மதுரை. வரம்பு - கரை. புவி நடை - உலகத் தொடர்பு. அட்ட -

ஒழித்த வாதவூரர் - திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகர். துரய - பரிசுத்தமான இடிபட்டது - துன்புற்றது.

வான் - பெருமை.

(இ . கு.) வன்மை + பட்ட, துன்பு + அட்ட.

(வி . ரை.) இந்திரன் வருணனிடம் கடலப் பொங்கச் செய்து மதுரையை அழிக்கக் கூறினன். ஆனால் உக்கிர பாண் டியன் வேலைச் செலுத்தி மதுரையைக் காத்தனன். இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடந்த போதெல்லாம் மதுரை அழியாமல் இருந்தமையின் அது வன்பட்ட கூடல் எனப்பட்டது. வையைக்குப் பெருமையாவது, அது புலவர் பெருமக்களால் சிறப்பித்துப் பாடப்பட்டமை ஆகும். சங்க நூலாகிய பரி பாடல் என்னும் தூலில் வையையைப்பற்றி இருபத்தாறு பாடல்கள் இருந்தன. ஆணுல் இப்போது எட்டுப் பாடல்கள் உள்ளன. இந்தப் பெருமை மட்டும் அன்று. திருஞான சம்பந்தர் சமணரோடு புனல் வாதம் செய்த போது அவர் எழுதியிட்ட வாழ்க அந்தணர்” எனும் பாடல் இவ்வாற்றில் எதிர்ந்து சென்றது. இந்தப் பெருமையைப் பரம வைணவ ராகிய பாரதம் பாடிய வில்லிபுத்துாராரும், கூறிய செஞ்