பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 97

செயல் ஏடு குறித்தெதிர் கொண்ட வைகை" என்று பேற்றிப் பாடியுள்ளனர். எனவேதான் வான்பட்ட: வைகை" எனப்பட்டது.

திருவாதவூரர் அரிமர்த்தன பாண்டியன் பொருட்டுக் குதிரை வாங்கப் பாண்டியன் பொருளேக் கொண்டு புறப் பட்டுச் சென்று குதிரை வாங்காமல் திருப்பெருந்துறையில் கோவில் கட்டினர். இதனே அறிந்த பாண்டியன் அவரை நல்ல வெயிலில் வையை ஆற்று மணலில் நிறுத்தி છાણ-ક્રક ஏற்பாடு செய்தான். அந்த வேளையில் மதுரைச் சொக்கேசர் வையையில் வெள்ளம் புரளச் செய்தார். அதனுல் கரைகள் உடைந்தன. அக்கரைகளேக் கட்ட ஊரார் ஈடுபட்டபோது, அவ்வூரில் இருந்த வந்திக் கிழவியின் பொருட்டுக் கூலி யாளாக வந்த சிவபெருமான், கரை அடைக்கும் பணியில் ஈடுபடாமல் தூங்கிக்கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும் இருந்த காரணத்தால் பாண்டியன் சிவபெருமானேச் பிரம்பால் அடித்தான். இந்த நிகழ்ச்சியின் போது இறைவர் திருமேனி புண்பட்டது. இதை எண்ணியே ஈண்டு வையை வரம் பிட்டநின் பொன்பட்ட மேனியில் புண்பட்டபோது' என்று கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்று விரிவைத் திருவாதவூரர்

புராணத்தில் காண்க,

திருவாதவூரர் உலக நடையாம் துன்பத்தை ஒழித்தவர் என்பதற்கு அவரது திருவாசகப் பாடல்களைக் கொண்டு

தெளியலாம். அடியார்கள் வீரர் என்பதைச் சேக்கிழார்

"பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்

மாதோர் டாகர் மலர்த்தாள் மறப்பிலார் ' என்றும், 'ஈர அன்பினர் யாதும் குறைவிலார்

வீரம் என்னுல் விளம்பும் தகையதோ " என்றும் அறிவித்திருப்பதல்ை;தெளிக.

7