பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$98 திருவகுட்பா

இறைவர் புண்பட்டதைக் கேட்டபோதே என் உள்ளம் துன்புறுகிறதே! நேரே தம் கண்ணுல் கண்ட திருவாதவூரச் உள்ளம் எப்படி வருந்தியதோ என்று எண்ணி நம் ஐயா இங்கு வருந்துகின்ருர். (82)

நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீள்நடையில் சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல் கூச்சிந்து புத்தியும் கொண்டுநீன் றேன் உள் குறைசிந்தும்வா ருேர்சிந்து போல் அருள் நேச்சிந்தன் ஏத்தும் உடையவனே. (பொ. ரை.) கடலில் உறங்குபவனுகிய திருமால் நேர் நின்று போற்றும் உடைமைப் பொருளாகி உள்ள இறைய வனே ! ஒழுகும் கண்களும், நிலை கெட்டு வாடிய மனமும், நீண்ட உலக நடையில் சிறப்பு ஒன்றும் இன்றி வாடும் வாழ்க் கையும் கொண்டு, தேன் அற்று வாடிக் கீழே விழுந்த நல்ல மலர் போல அறிவு கூர்மை அற்ற புத்தியும் கொண்டு நின் றேன். ஆகவே, என் உள்ளத்தில் பொருந்திய குறைகள் சிந்தும் விதத்தை உன் உள்ளத்தில் ஆராய்வாயாக. கடல், போலத் திருவருள் புரிவாயாக." (எ . து )

(அ - சொ.) சிந்தன் - கடலில் உறங்கும் திருமால். ஏத்தும் - போற்றும். உடையவன் . உயிர்களைத் தன் உடைமையாகக் கொண்ட இறைவன். கூம் - அறிவின் கூர்மை. புந்தி - புத்தி. சிந்தும்வாறு - சிந்தும்படி. ஓர் - ஆய்ந்து உணர். சிந்து - கடல்.

(இ.கு.) புத்தி என்பது புந்தி என நின்றது. மெலித்தல் விகாரம் பற்றி என்க.

(வி . ரை.) திருமால் இறைவனேப் புகழ்ந்து போற்றிய உண்மையினைத் திருமால்பூர் (இதுவே திருமால் பேறு) தலத்தின் வரலாற்ருல் உணரலாம். மாலினும் வழிப்ாடு செய் மால்பேறு என்று சம்பந்தரும், ‘பூம்புனல் வரு ஆற்றின்