பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவருட்யா

பெண் யானையின் நடைக்கு உவமை கூறுவர். இந்தக் கருத்தில்தான் ஈண்டுப் பார்வதி பிடி என்றே கூறப்பட்டாள். கழல் என்பதன் பொருள் வீரத்தண்டை. ஆனால் அஃது இங்கு அவ் வீரத்தண்டையை அணிந்த பாதத்தை உணர்த்தி நிற்கிறது.

இங்கு நம் ஐயா பாடிய பாட்டு, அப்பர் பெருமான் பாடி யுள்ள,

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்

நோக்கும் முறுவலிப்பும் துடிகொண்ட கையும் துதைந்தவெண்

ரீைறும் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித்

தோலும்என் பாவிநெஞ்சில் குடிகொண்ட வாதில்லை அம்பலக்

கூத்தன் குரைகழலே "

என்னும் பாட்டை அப்படியே அடி ஒட்டியதாகும். (84)

விதிக்கும் பதிக்கும் பத்ததி ஆர்மதி வேணிப்பதி திதிக்கும் பதிக்கும் பதிமேல் கதிக்கும் திகழ்பதிவான் துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொல்கடந்த பதிக்கும் பத்சித் பதினம் பதிநம் பசுபதியே.

(பெர் . ரை.) நம் உயிர்க்கு நாயகளுகிய இறைவன், அவ்வுயிர்கள் இவ்விவ்வாறு வாழவேண்டும் என்று விதிக் கின்ற தலைவனகிய பிரமனுக்கும் தலைவன். கங்கை >b3ز பொருந்திய சந்திரன் அமைந்த சடையுடைய தலைவன், பிரமன் படைத்த உலகினக் காக்கின்ற திருமாலுக்கும் தலைவன். மேல் நிலையாகிய மோட்ச உலகிலும் விளங்கு கின்ற தலைவன். தேவலோகத்தில் உள்ள தேவர்கள் வணங் கும் இந்திரனுக்கும் தலைவன். எல்லாப் படியாலும் உயர்ந்த