பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருவருட்டின்

கட்டளைக் கலித்துறைப் பாட்டு, நான்கு அடிகளைக் கொண்டு, ஒவ்வோர் அடியும் ஐந்து ஐந்து சீர்களைப் பெற்று, ஈற்றடியின் ஈற்றுச்சீர் மட்டும் ஏகாரத்தால் முடியும்.

இந்த அளவிலும் இந்தப் பாட்டின் இலக்கணம் அமை வதன்று. ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் விளங்காய்ச் சீராக இருக்கவேண்டும். இத்துடன் இன்றி ஒவ்வோர் அடியிலும் இயற்சீர் வெண்தளையும் வெண்சீர் வெண்தளையும் பொருந்தி வர வேண்டும்.

இன்னேரன்ன இலக்கணங்களைப் பொருந்தப் பெற்று வருவதே கட்ட8ளக் கலித்துறையாகும். கட்டளைக் கலித் துறைக் குரிய இலக்கணத்துடன் அமைந்த பாடலின் ஒவ் வோர் அடியின் முதல் சீர் நேர் அசையில் தொடங்கினல், ஒவ்வோர் அடியிலும் பதினறு எழுத்துகளும், நிரை அசை யில் தொடங்கில்ை பதினேழு எழுத்துகளும் அமைந்திருக் கும். எழுத்துகளை எண்ணும் போது, தலையில் புள்ளி பெற்ற மெய் எழுத்துகளை நீக்கி எண்ணுதல் வேண்டும்.

அடிஅடி தோறும் ஐஞ்சீர் ஆகி முதல் சீர் நான்கும் வெண்தளை பிழையாக் கடையொரு சீரும் விளங்காய் ஆகி நேர்பதி ஞறே திரைபதி னேழ்என்று ஒதினர் கலித்துறை ஒர்அடிக் கெழுத்தே. என்னும் நூற்பாவை இங்குக் கருதுக.

இந்த இலக்கண விதிக்குச் சிறிதும் த வருத நிலையில் திருவருள் முறையீட்டில் அமைந்த கட்டளைக் கலித்துறைப் பாக்கள் அமைந்திருப்பதை உற்று நோக்கவும்.

வெண்சீர் வெண்தளே, இயற்சீர் வெண்டகள நேர் அசை நிரை அசை ஆகிய இவற்றின் விளக்கங்களைத் தெளி. வுறக் காண விரும்பின் யாப்பிலக்கண நூலில் காண்க.

திருச்சிற்றம்பலம்