பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 02 திருவருட்பா

வீட்டிற்குச் சென்று மனம் வாடுதல் உன் தொண்டர்கட்கு முறை அன்றே. ஆகவே நீதான் என்னேக் காத்தருள

வேண்டும்." (எ . து.)

(அ . சொ.) வீறு - மேம்பாடு. வேற்றவர் . அயலார். மனே - வீடு. மரபு . முறை.

(இ . கு.) கண்டாய், முன்னிலை அசைச்சொல். (86)

வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனே இடத்தே

தினம்போய் வரும்.இச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச் சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறம்நிகழ்த்தா இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்அரசே.

(பொ - ரை.) அரசே காட்டுக்குப் போய் வருவது போலக் கொடுமை மிக்க செல்வர் வீட்டுக்கு நாள்தோறும் போய், இந்தச் சிறியவனது சிறுமைச் செயல் போய், கோபம், கொடிய பகையாகிய பற்றுள்ளமும் போய், உன் வன் மைகளைக் கூருத தீயவர்களின் கூட்டத்திற்குப் போய், கொடுமையான மனம் போய் வாட்ட முருமல் நான் இருப்பது எந்த நாளோ ? (எ . து.)

(அ - சொ.) வனம் - காடு. மனை . வீடு, சினம் - கோபம். காமம் - பற்று. திறம் . வன்மை. இனம் - தீயவர் கூட்டம். என்று - எப்பொழுது.

(இ - கு.) போலே என்பதன் ஏகாரம் அசை. செயல்-- அது, அது பகுதிப் பொருள் விகுதி.

(வி - ரை.) சினம் என்னும் சேர்ந்தாரைக் சொல்லி இனம் என்னும் ஏமாப் புணையைச் சுடும். ஆதலின், அச் சினம் நீங்கவேண்டும். என்வேதான் சினம் போய் என்றனர். காமம் பொதுவாகப் பெண் போகத்தையும் சிறப்பாக உலகப் பொருள்களின் மீது வைக்கும் பற்றையும் உணர்த்தும்,