பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1,04 திருவருட்யா,

பிரமன், திருமால் முதலான மனைவிமார்களின் பொன் தாலிக் கயிற்றைக் காத்து இரட்சித்த அருள் கடலே! தலைவனே ! பிறருடைய அற்பமான வீடுகளை அடைந்து இந்ததாளில் வருந்தாதபடி என் நாணத்தைக் காத்தருள்வாயாக. உன் மேல் ஆணையிட்டுக் கூறுகின்றேன். உன் திருவடிகளின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன். இந்த ஏழைக்கு உன் திருவடிகளைத் தவிர வேறு அடைக்கலம் என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லையே! ' (எ . து.)

(அ - சொ.) நையாது - வருந்தாது. நஞ்சு - விடம். அயன் - பிரமன், மால் - விஷ்ணு. மனே - மனைவிமார். ஆதியர் - முதலியோர். பொன் நாண் - பொன் தாலி. புன் . அற்பமான, மன - வீடு, என்நாணே - என் நாணத்தை. ஆணே - சத்தியம். சரண் - அடைக்கலம்.

(இ - கு.) நாள் - நையாது. நஞ்சு - ஏற்று. மனே, இட ஆகுபெயர். பொன் + நானே. தன் + ஆணை.

(வி - ரை.) மனே ஆதியர் ஆவார் பிரமன், திருமால் ஆகிய இவர்களின் மனே விமார்களே அல்லாமல் தேவலோக மாதர்கள் அனைவரும் ஆவர். இறைவன் தேவமாதர்களின் பொன் நாணக் காத்த வரலாற்றைப் பன்னிரண்டாம் பாட்டின் விசேட உரையில் காண்க. (89)

பவசா தனம்பெறும் பாதகர் மேவும்.இப் பாரிடைநல் சிவசா தனத்தரை ஏன்படைத் தாய் அத் திருஇலிகள் அவசா தனங்களைக் கண்டிவர் உள்ளம் அழுங்களின்ருே கவசா தனம்எனக் கைம்மான் உசியைக் களித்தவனே.

(யொ - ரை.) உடம்புக்குச் சட்டையாகவும், அமர் தற்கு ஆசனமாகவும் இருக்க யானையின் தொலே மகிழ்வுடன்