பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முன்றயீடு 1 05

கொண்டிருப்பவனே! அழிவுக்கே பயற்சி செய்துவரும் கொடியவர்கள் வாழும் இந்த உலகில், சிவபெருமான அடை தற்கு தல்முறையில் பயிற்சி செய்து வரும் சாதுக்களே ஏன் படைத்தாய் ! பாவத்தையே சாதகமாகக் கொண்டு வாழும் நல்வினை இல்லாத தீயவர்கள் அறிவுக்குகந்த சிவசாதனையைச் செய்பவர்களைக் கண்டு பொருமையால் மனம் புழுங்க என்று எண்ணியோ படைத்தாய்?' (எ . து.)

(அ - சொ.) கவசம் - சட்டை. ஆதனம் - பீடம், ஆசனம். கைம்மான் . யானே. உரி - தோல், பாதகர் - கொடியவர்கள், பவம் - அழிவு. சாதனம் - பயிற்சி. சிவ. சாதனம். சிவபெருமான அடையப் புரியும் சரியை, கிரியை, யோகம், ஞானமாகிய பயிற்சிகள், அழுங்க - பொருமை. கொண்டு துன்பப்பட. திருவிலிகள் - நல்வினே இல்லாதவர். ,بهة قروى سد له إكنه

(இ - கு.) கவசம் + ஆதனம். பார் இடை என்பதன் இடை, ஏழன் உருபு.

(வி - ரை.) அவம். வேறு, அவவேறு. அவம் என்னும் சொல்லுக்கு வீண் என்பது பொருள். அவ என்பதற்கு அறிவு என்பது பொருள். கண்டு நம் ஐயா அறிவு என்னும் பொருள்தரும் அவ என்னும் சொல்லேயே பயன்படுத்தி யுள்ளனர். அவசாதனம் ஆவன அறிவுக்கு உகந்த செயல் கள். அவையே கோயில்களுக்குச் சென்று வழிபடுதல், அடி யார்களுக்குத் தொண்டு புரிதல், பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறுதல் முதலியன.

காசியில் இருந்த யானை வடிவுகொண்ட அசுர்னேச் சிவ பெருமான் கொன்று அந்த யானையின் தோல்ச் சட்டையாகக் கொண்டனர். இந்த வரலாறே கைம்மாவின் உரியைக் களித்தவனே" என்னும் தொடரில் அமைந்துளது. (90)