பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 06 திருவருட்யா

தான்செய்த புன்னியம் யாதோ சிவாய நமஎனவே ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்என் ஒப்பவர்.ஆர் வான்செய்த நான்முகத் தோனும் திருநெடுமாலுமற்றைத் தேன்செய்த கற்பகத் தேவனும் தேவரும் செய்அரிதே.

(பொ. - ரை.) நான் முன்பிறிவியில் செய்த புண்ணியம் எதுவோ ? தெரியவில்லையே! தசையால் ஆகிய நாக்கைக் கொண்டு சிவாயநம என்று சொல்லும் பேறு பெற்றேன், ஆகவே, எனக்கு ஒப்பானவர் யாரும் இலர். மேல் உலக மாகிய சத்திய லோகத்தில் உள்ள பிரமனும், திருமாலும், தேன் நிறைந்த கற்பக விருட்சத்திற்குரிய இந்திரனும் மற்றும் உள்ள தேவர்களும் நான் கூறும் பஞ்சாட்சர செபத்தைக் கூறுவது மிகவும் கடினம். (எ . து )

(அ - சொ.) ஊன் . தசை. வான் - மேல் உலகம் (சத்திய லோகம்) நான் முகத்தோன் - நான்கு முகமுடைய பிரமன். கற்பகத் தே கற்பக விருட்சத்தின் கீழ் உள்ள இந்திரன். அரிது - கடினம்.

(இ - கு.) ஆர் என்பது யார் என்பதன் மரூஉ, செய், முதல் நிலைத் தொழிற்பெயர்.

(வி - ரை) சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். இந்த மந்திரத்தைக் குரு முகமாகக் கேட்டுச் செபித்தல் வேண்டும். நமசிவாய என்பது துால பஞ்சாட்சரம். இதனைக் குரு மூலம் கேட்டல் இன்றியே செபிக்கலாம். சிவபெருமான் மாணிக்க வாசகர்க்கு உபதேசம் செய்தது சிவாயநம எனனும் மந்திரமே ஆகும். இந்த உண்மையினே மாணிக்க வாசகரே. முன் நின்று ஆண்டாய் எனே முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின்று ஏவல் செய்கின்றேன்' என்று கூறுதல் காண்க. முன்னின்று ஆண்டதாவது சூட்சும பஞ்சாட்சர மந்திரமாம், சிவாயநம என்பதில் உள்ள