பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு ! ዕ?

சியை முன் நிறுத்திச் சிவாயநம என்று உபதேசித்து ஆட் கொண்டமை ஆகும். இவ்வாறு இறைவர் சிவாயநம என்று: உபதேசம் செய்ததனுல் பெரிதும் மகிழ்ந்த மாணிக்கவாசகர், நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனுய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவத் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் ஊனுரும் உயிர் வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.

என்று பாடிக் களிக்கின்ருர். இந்த மணிமொழியின் நினைவே தம் வள்ளலாரை நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே, ஊன் செய்த நாவைக்கொண்டு ஒதப் பெற்றேன் என ஒப்பார் ஆர் ' என்று குதுகலமாகப் பாடச் செய்தது. (91)

உற்ரு யினும் மறைக் கோர்வரி யோய்என உற்றுப்பெற்ற தற்ரு யினும்இனி யானே தின் நல்அருள் நல்கில்என்னை விற்ரு யினும்கொன வேண்டுகின் றேன்.என் விருப்பறிந்தும் சந்ரு யினும்இசங் காதோநீன் சித்தம் தயாநிதியே.

(:ெ1ா - ரை.) கரு ணு நிதியே! வேதங்கள் நெருங்கி ஆராய்ச்சி செய்தாலும் அவ் வேதங்களாலும் உணர்தற்கரிய அரிய பொருளே ! என்னைக் கருவில் தாங்கிப் பெற்ற நல்ல தாயைக் காட்டிலும் இனியவனே! உனது நல்ல திருவருளேத் தந்து என்னைப் பிறர்க்கு விற்பதற்காயினும் ஏற்றருள வேண் டும் என உனே வேண்டுகின்றேன். இவ்வாருன என் விருப் பத்தை நீ நன்கு தெரிந்திருந்தும், உன் உள்ளம் சிறிதேனும் என்னே க் குறித்து இரக்கம் கொள்ளாதோ? (எ . து.)

(அ - சொ.) தயாநிதி - கருணை நிறைந்த செல்வம். (இறைவன்) ஆயினும் - ஆராய்ந்தாலும், ஒர்வு - உணர் தல். நல்கி. தந்து. சித்தம் . உள்ளம். மறை - வேதம்.