பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 திருவருட்பா

(இ.கு.) தயை +நிதி. உற்று+ஆயினும். இது குற்றிய லுகரப் புணர்ச்சி. ஒர்வு + அரிது. இது முற்றியலுகரப் புணர்ச்சி. நல் + தாய்.

(வி ரை.) வேதம் இறைவனைப் பலவாருக எண்ணி ஆராய்ந்திருக்கிறது. அப்படி ஆராய்ந்தும் இறைவனது உண்மை நிலையினை உணராது தடுமாறி இருக்கிறது. இந்த உண்மையினைப் பரஞ்சோதியார்,

'பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல உள்ள மதியின் பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிதல்ல என்று பெருநூல் வேதம்கிடந்து தடுமாறும் வஞ்ச

வெளி என்ப கூடல் மறுகில் பாதங்கள் நோவ வளே இந்தன் ஆதி

பகர்வாரை ஆயும் அவரே.” என்று கூறி விளக்குதல் காண்க.

'ஆர் அறிவார் என் ைஅனந்தமறை ஓலமிடும் பேர் அறிவே இன்பப் பெருக்கே பராபரமே' என்பது தாயுமாளுர் வாக்கு.

'இருக்காதி சதுர்வேதம் இசைப்பதுநின் பல்பேதம் ஒருக்காலும் ஒன்றுரைத்த தொன்றுரைக்க அறியாதே' என்பது சைவ எல்லப்ப நாவலர் கருத்து.

இன்ைேரன்ன கருத்துக்களே க் கொண்டே உற்று ஆயினும் மறைக்கு ஒர்வு அறியோய்' என்றனர்.

இறைவனுக்குத் தம் அடியார்களே விற்கும் உரிமை உண்டு என்பதைச் சுந்தரர், விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்' என்று கூறுதல் காண்க. இந்த முறைமையினை தன்கு உணர்ந்தே நம் ஐயா என்ன விற்ருயினும் கொள வேண்டுகின்றேன் என்று வேண்டுவாராயினர். (92)