பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 10.9

வான்மா றினும்மொழி மாருத மாறன் மனம்களிக்கக் கான்மாறி ஆடிய கற்பக மேநின் கருணஎன்மேல் தான்மாறினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப் பான்மாறி னும்பிள்ளை பால்மாறு மோஅதில் பல்இடும்ே.

(பொ , ரை.) மேகம் நீர் பொழிதலில் மாறுபட் டாலும், சொன்ன சொல்லிலிருந்து மாருத இராசசேகர பாண்டியனுடைய மனம் மகிழும்படி கால் மாறி ஆடிய கற்பகமே ! உன் திருவருள் என் மீது வைக்க மாறுபட்டாலும் நான் உன்மீது அன்பு காட்டுவதில் சிறிதும் மாறுபட மாட் டேன். குழந்தையைப் பெற்ற தாய்க்குத் தன் முலையில் பால் சுரப்பது தடைப் பட்டாலும் அவள் பெற்ற குழந்தை பால் வற்றிய தாய் முலேயில் தன் பல்லே வைக்கச் சிறிதேனும் தயங்குமோ தயங்காது." (எ . து.)

(அ . சொ.) வான் . மேகம். மாறன் - பாண்டியன் (இராசசேகரன்) பால் மாறுமோ - தயங்குமோ.

(இ - கு.) வான், இடவாகுபெயர்.

(வி. ரை.) பாண்டியர்கள் சத்தியவான்கள் என்பதை உணர்த்தவே வான்மாறினும் மொழி மாருத மாறன் எனப் பட்டது. மதுரையில் இராசசேகர பாண்டியன் என்பவன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் நடனகலேயைத் தவிர்த்து அறுபத்துமூன்று கலை களிலும் வல்லவனுய் இருந்தான். பரத நாட்டிய கலேயிஆன அவன் கற்காமைக்குக் காரணம், அக்கலை சிவபெருமானுக்கே சிறப்பான முறையில் அமைந்திருப்பதல்ை, அக்கலையைத் தான் பயிலக் கூடாது என்பதற்காகவே ஆகும். ஆளுல், இப் பாண்டிய மன்னன் காலத்தில் உறையூரில் அரசாண்டு வந்த க்ரிகாலன் அறுபத்துநான்கு கலேகளிலும் வல்லவனுய் இருந்தான்.