பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 திருவருட்பா

இந்த நிலையில் சோழநாட்டுப் புலவர் ஒருவர், இராச சேகர பாண்டியனைக் கண்டபோது, "எங்கள் நாட்டுக்கரிகால சோழனுக்குப் பரதநாட்டியம் உள்பட அறுபத்துநான்கு, கலைகளில் நல்ல புலமை உண்டு. நீ எல்லாக் கலைகளையும் கற்றிருந்தும் பரத நாட்டியக் கலையினேப் பயிலாதது குறை யாகும் ' என்றனர். அக்குறையையும் போக்கப் பாண்டியன் பரத கலையையும் நன்கு பயின்ருன். அப்படி அக்கலையினைப் பயின்றபோது, அதனைப் பயின்றதல்ை ஏற்பட்ட துன்பங் களே நன்கு உணர்ந்தான். இந்த உணர்ச்சி மேலிட்டினல் மதுரை வெள்ளியம்பலத்தில் வலக்காலை ஊன்றி இடக் காலைத் துாக்கி எப்போதும் திருநடனம் புரியும் கூத்தப் பெரு மானேக் கண்டு, இறைவரே !. நான் சில நாட்களாகப் பரத நாட்டியம் பயின்றபோது பட்டபாடு எனக்கு நன்கு தெரியும். நீங்கள் ஓய்வு இன்றி ஒரே காலில் திருக்கூத்தினேப் புரிந்து கொண்டிருந்தால் உங்கள் கால் நோகாதா? ஆகவே நீங்கள் இனி இடக்கால ஊன்றி வலக்காலத் தூக்கித் திரு. நடனம் புரிவீர்களாக, இன்றேல் யான் உயிர் விடுவேன் ’’ என்று வேண்டினன். இப்படி வேண்டிய இராசசேகர பாண் டியன் உள்ளம் மகிழும் வண்ணம் இறைவர் அவ்வாறே இடக் காலை ஊன்றி வலக்காலத் தூக்கித் திருக்கூத்து இயற்றுவார் ஆயினு: பாண்டினு மகிழ்ந்தான். இந்தத் திருக் கோலத்தை இன்றும் மதுரைக் கோயிலுள் இருக்கும் வெள்ளி யம்பலத்தில் கண்டு களிக்கலாம். இந்த வரலாறே திரு. விளையாடல் புராணத்தில் கால்மாறி ஆடின படலத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினேயே நம் ஐயா மாறன் மனம் களிக்கக கால்மாறி ஆடிய கற்பகமே என்று குறித்.

துள்ளனர்.

கற்பகம் தேவலோகத்தில் உள்ள ஒரு மரம். இது தன்னிடம் வந்து தைக் கேட்பினும் தரவல்லது.