பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 3

நூல் திருச்சிற்றம்பலம் அருள்.அர சேஅகுள் குன்றேமன் ருடும் அருள்.இறையே அருள்அமு தேஅருள் பேறே நிறைந்த அருள்கடலே அருள்அணி யேஅருள் கண்ணேவிண் ஓங்கும் அருள்ஒளியே அருள்அற மேஅருள் பண்பேமுக் கண்கொள் அருள்சிவமே!

(பொழிப்புரை) அருள் நிறைந்த அரசே அருளுடைய குன்றே சிதம்பரப் பொற் சபையில் திருக்கூத்துப் புரிகின்ற அருள்நிறைந்த இறைவனே! அருள் வாய்ந்த தேவாமுதமே : அருள்புரியவே விளங்கும் எங்கள் பாக்கியமே! அருளே நிறைந்த கடலே! அருளே அணிகலமாக உடையவனே: அருள் நிறைந்த கண்ணே! சிதாகாசத்தில் விளங்கும் அருள் பெருஞ் சோதியே! அருளாகிய அறக் கடவுளே! அருள்குண முடையவனே மூன்று கண்களைக் கொண்ட சிவபரம் பொருளே !? (என்பது.)

(அருஞ்சொல்) மன்று - சிதம்பரத்தில் உள்ள பொன் அம்பலம். பேறு - பாக்கியம். அணி - ஆபரணம். விண் . ஆகாயம். சிவம் - என்றும் மங்களப் பொருளாய் உள்ள பரம்பொருள்.

(விசேட உரை) இப்பகுதி திருவருள் முறையீடு என்னும் பெயர்க்கு ஏற்ப, முதல் பாடலில் அருள் என்னும் சொல் பன் முறை அமைந்திருத்தலேக் காணவும். இதில் சிவபெரு மாஐன அரசே, குன்றே, இறையே, அமுதே, பேறே, கடலே, அணியே, கண்ணே, ஒளியே, அறமே,பண்பே, சிவமே எனப் பன்னிரண்டு சொற்களால் விளித்துள்ள அருமை மிக மிக உற்றுநோக்குதற்குரியதாகும். அதாவது, இறைவன் பிரம்ம ரந்திரத்திற்கு மேல் பன்னிரண்டு தானங்களுக்கு அப்பால் விளங்குவன் என்பதாம். இந்த உண்மையினக் குமர குருபர