பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு } | .

அதுபோல் இறைவனும் அன்பர்கட்கு அவர்கள் வேண்டி யதைத் தடையின்றித் தருதலின் கற்பகமே எனப்பட்டான்.

தாயின் மூலையில் பால் சுரப்பது நிற்பினும் குழந்தைகள்: அதில் வாய்வைத்துச் சுவைப்பதில் பின்வாங்குவதில்லை. இதனை மிகவும் இரக்கம் தோன்ற,

- *புல்உ8ளக் குடுமிப் புதல்வன் பல்மாண்

பால்இல் வருமுலே சுவைத்தனன் பெருஅன்" என்றும்,

'மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்துதின வாடிய முலையள் " என்றும்,

"ஆடுதணி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்பசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பெசல்லா வறு முலை சுவைத்தொ றழுஉம்தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண்ணன் மனேயோள் ' *றம் புறநாநூற்றில் பெருஞ்சித்திரனர் பாடி உணர்த்து, காண்க. இந்த நிலையினை உட்கொண்டே நம் வள்ளலார், "பெற்ற தாய்க்கு முகலப்பால் மாறினும் பிள்ளை பால்மாறுமோ அதில் பல்இடவே என்றனர், (98)

அன்பர் தாம்மனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே இன்பம் தாம்இச் சிறுநட்ை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் என்பர் தாப நில அறிந்தும் இரங்கிலயேல்

வன்பர் தாம்தண் அருள்கடலேஎன்ன வாழ்வெனக்கே.