பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 திருவருட்யா

(பொ. ரை.). கொடுமை என்பது சிறிதும் இல்லாமல் தல்ல அருளை அன்பர்கட்குக் கொடுக்கும் கடலே! அன்பு என்பதைச் சிறிதும் இல்லாத மனத்தையுடைய அறிவு குறைந்த ஏழையாகிய நான் துன்பத்தால் பெரிதும் வாடி இன்பம் என்பது சிறிதும் இல்லாத இந்த அற்பமான ஒழுக்கங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் வாடுகிள் றேன். யாவரும் இரக்கங்காட்டக் கூடிய என் நிலையினை நீ அறிந்திருந்தும் என்மீது இரக்கம் காட்டவில்லையானல், எனக்கு இவ்வுலக.வாழ்வு என்ன பயனேத் தரும்?' (எ . து.) (அ - செ.) வன்பு - கொடுமை. நடை - நடத்தை ஒழுக்கம்.

(வி - ;ை.) அரிது எனும் சொல் இன்மை என்னும் பொருள் தந்து நிற்கிறது. நம் ஐயா நிறைந்த இறை அன்பைப் பெற்றிருந்தும் அன்பு அரிதாம் மனத்து ஏழை யேன் யான் என்று கூறிக் கொள்வது, தமக்குமுன் இருந்த ஞானிகளின் போக்கைப் பின்பற்றியே ஆடும். மாணிக்க வாசகரும் தம்மைப் பற்றிக் கூறுகையில்,

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய் ஆனல் வினையேன் அழுதால் உன்னேப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனேவந் துறுமாறே என்று கூறுதல் காண்க. (94)

மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில் கைகண்ட நீளங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் ஒன்றே மெய்கண்ட நான் மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனுே தெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.

(பொ. - ரை.) மைபோலும் கருநிறம் கொண்ட கழுத் தும், மான்போலும் கண்களையுடைய உமாதேவி இடப்