பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு † : 3

பக்கம் பொருந்தியுள்ள பாகத்தையும் கொண்டு அருள் செய் வதஞல் நீதான் கண்கண்ட தெய்வம் என்பதை நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகு பொய்யான தெய்வங் களைச் சென்று அடைவனே? நெய்யோடு கூடிய உணவைக் கை விட்டு எவரேனும் நீர் மிகுதியும் கொண்ட கேழ்வரகு கூழைத் தேடிப் போவாரோ?” (எ . து.)

(அ .சொ.) வாமம் - இடப் பாகம். மேவுவனே . சென்றடைவேளுே. ஊண் - உணவு. நேடுவது - தேடுவது.

(இ . கு.) மை, பண்பாகு பெயர். மான் உவமை ஆகுபெயர்.

(வி - ரை.) திருப்பாற் கடலில் தோன்றிய விடம் கருமை யாக இருந்தமையின், அதனேக் கண் மைக்கு ஒப்பாகச் சொல்வது புலவர் மரபு. அவ்வாறே மான் போன்ற கண் க8ளப் பெற்ற பெண்களே மான் எனவே கூறுதலும் புலவர் மரபு. சிவபெருமான் விடத்தை உண்டதும், உமாதேவிக்குத் தன் இடப்பாகத்தைத் தந்ததும், அருளுக்கு அறிகுறி ஆதலின் 'அருளில் கைகண்ட நீ' என்ப்பட்டது. இறைவன் கன் கண்ட தெய்வம் என்பதை அப்பர், 'ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்" என்று அறிவுறுத்தல் காண்க. திருநாவுக்கரசர், சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றேம்' என்று உணர்த்திய உண்மை யினைக் கொண்டே நம் ஐயா, "பெய்கண்ட் தெய்வங்கள் மேவுவனே?’ என்ருர். நெய்கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நாடுவதே?' என்னும் நம் ஐயாவின் திருவாக் கைப் படிக்கும்போது, 'கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே" 'அறம் இருக்க மறம் விலக்குக் கொண்டவாறே இருட்

8