பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 14 திருவருட்பா

உறையில் மலடு கறந்து எய்த்தவாறே விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே' 'பாழுரில் பயிக்கம்புக் கெய்த்தவாறே தவம் இருக்க அவம் செய்து தருக்கி, னேனே' கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்தவாறே" என்று வாகீசர் கூறியுள்ள அருள்வாக்குகள் நினவுக்கு வருகின்றன.

வேணிக்கு மேல்ஒரு வேணிவைத் தோய்முன் விரும்பி ஒரு மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த காணிக்குத் தான் அரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாப் பாணிக்கு மோதரும் பாணிவத் தேற்றவர் பன்மை கண்டே.

(பொ. ரை.) முன்பு உன்னை அடுத்து முறையிட்ட தருமி என்னும் பார்ப்பனச் சிறுவனுக்குத் தமிழ்ப்பாடல் எழுதித் தந்து பொன் முடிப்பை வாங்கிக் கொடுத்த சடைக்கு மேல் கங்கை ஆற்றை வைத்துள்ள கங்கா தரனே ! எனக்கும் உன்னைக் கேட்கும் உரிமை, வழி வழி இருப்பதஞ்ல் அந்த வழி வழி உரிமையில் பாதி அளவேனும் கேட்கும் உரிமை யினே எனக்குத் தந்து உன் அருளேக் காட்டுவாயாக. தம்மை வந்து ஒரு பொருளே க் கேட்பவர்களின் இரக்கமான நிலை யினக் கண்டு கொடுக்க இசைந்தவர்களின் கை கொடுப் பதற்குத் தாமதம் செய்யுமே ? ஒரு போதும் தாமதம் செய்யாதன்றே ! (எ . து.)

(அ - சொ.) மாணி - பார்ப்பனச் சிறுவன் (தருமி

என்பவன்) வகுத்து - எழுதித்தந்து. கிழி - பொன் முடி. பான்மை - தன்மை, நிலமை. பாணி - கை. பாணிக்குமோ - தாமதிக்குமோ. வேணி - சடை, நீர்.

(இ - கு.) கண்டாய், முன்னிலே அசைச்சொல்.

(வி. ரை.) இறைவன் திருவாயிலிருந்து வரும் மொழி கள் அனைத்தும் வேதமொழி ஆதலின், கொங்குதேர்