பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 115

வாழ்க்கை " என்று இறைவர் எழுதிக் கொடுத்த தமிழ்ப் பாட்டும் வேதம் ஆயிற்று. இதல்ைதான் வேதம் வகுத்த்ே, எனப்பட்டது. மேலும் இதல்ை அருளாளர்களின் தமிழ்ப் பாடல்களும் வேதம் என்று கூறுதற்கு எல்லாப்படியாலும் தகுதி உடையது என்பதை நம்மனுேர் அறியவே நம் ஐயா, வேதம் வகுத்தே' என்று கூறினர். 'விரும்பி ஒரு மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித் தந்த " என்னும் வரியில் அமைந்த வரலாற்றை ஐம்பத்தைந்தாவது பாடலின் விசேட உரையில் காண்க. சடைக்கு மேலே கங்கை ஆருகிய நீரை வைத்திருப்பதை 'வேணக்குமேல் ஒரு வேணி வைத்தோய்' என்னும் சொல் அழகு தோன்றப் பாடி இருப் பதை உற்று நோக்குக. வேணி என்பது சடையையும், நீரையும் குறிக்கும்.

கொடுக்க வேண்டும் என்று ஒருவர் உள்ளத்தில், எண்ணிவிட்டால், கொடுக்கத் தன் கை தடுக்கப்பட்டாலும் கொடுத்தே விடுவர். கை தடுக்கப்படுதற்குக் காரணம் அருகில் இருப்பவர் கொடுப்பதைத் தடைசெய்வதாகும். இந்த உண்மை, மாவலி சக்கரவர்த்தி, வாமனனுக வந்த திருமால் தனக்கு மூன்றடி மண் வேண்டுமென்று கேட்ட போது, கொடுக்க வேண்டா என்று சுக்ராசாரியார் தடுத்தும் மாவலி ஈந்தது கொண்டு தெரிய வருகிறது. இதன.

' நினைக்கிலே என் கை நிமிர்ந்திட வந்து தனக்கிய லாவகை தாழ்வது தாழ்வில் கனக்கரி யான் அது கைத்தலம் என்னில் எனக்கிதன் மேல்நலம் யாதுகொல் என்ருன்." ' வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர் வள்ளியர் ஆக வழங்குவ தல்லால் எள்ளுவ என்சில இன் உயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றல்.”