பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 6 திருவருட்யா

எனும் கம்ப ராமாயணப் பாடலால் தெளிக. இதல்ைதான் * நம் வள்ளலார் பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே?” என்று உணர்த்தி அருளினர். (95)

மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள் இறைக்கொளித் தாய்இங் கதிலேசர் பழிஇலை என்தன்மனக் குறைக்கொவித் தாலும் குறைதீர்த் தருள்எனக் கூவிடும்என் முறைக்கொளித் தாலும் அரசேநீன் பால்பழி மூடிடுமே.

(பொ. - ரை.) 'அம்பலத்தரசே! நீ வேதங்கள் தேடிக் காண முடியாதபடி ஒளித்துள்ளாய்! திருமால் பிரமன் ஆகிய இருவர்களாலும் காண முடியாதபடி ஒளித்துள்ளாய். இதனுல் உனக்குப் பழி கிடையாது. என் மனக்குறை களுக்கு ஒளித்தாலும் என் குறைகளே நீ மறைந்திருந் தேனும் தீர்த்தருளுக என ஒலமிடுகின்ற என் முறையீட்டுக்கு ஒளித்தால் உனக்குப் பழிவந்து சேரும்” (எ . து.)

(அ - சொ.) மறை - வேதம். திசைமாமுகம்கொள் இறை பிரமதேவன். மா - சிறந்த,

(இ - கு.) மா.உரிச்சொல்.

(வி - ரை.) நான்கு வேதங்களும் முரண்பட்டுக் கூறு கின்றமையின் அவற்ருல் இறைவனேக் காண முடியவில்லை. இதனேச் சைவ எல்லப்ப நாவலர் தம் அருணேக் கலம்பகத்தில் 'இருக்காதி சதுர்வேதம் இசைப்பதுநின் பலபேதம் ஒருக்காலும் ஒன்றுரைத்த தொன்றுரைக்க அறியாதே' என்று அறிவித்துள்ளனர்.

திருமாலும் பிரமனும் ஞானக்கண் அதுகொண்டு. இறை வனத் தேடாமையில்ைதான் சிவபெருமானேக் காணுது வருந் தினர். இந்த உண்மையினேயும் அருணேக் கலம்பகம்,