பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 s 9

அவரக் கொண்டு என் குணங்கள் எல்லாவற்றையும் உன்னி டம் முறையிட்டுக் கூறினுலும் நீ சிறிதும் திருச்செவியில் ஏற்றுக் கேட்காதவன் போலச் சும்மா இருக்கின்ற அன்பு தான் என்னவோ? புரியவில்லையே. என்ன அடிமையாகக் கொண்டாலும் சரி ; அல்லது மீண்டு வர முடியாத நரகத்தில் என்னை அழுத்தினுலும் சரி. உன்னைச் சரண் புகுந்த என்னக் கைவிட வேண்டா' (எ . து.)

(அ .சொ.) நீள் - மிக்க. ஆதரவு - அன்பு, நிகழ்த்த . சொல்ல. வாளா - சும்மா. கேண்மை - அன்பு. சூள் . ச்பதம்.

(வி - ரை.) ஏனையோர் தாம் ஏதேனும் முடிக்கவேண்டு மால்ை அறைகூவி அதாவது ச்பதம் செய்து அக் காரி யத்தை முடிக்கவேண்டும். இவ்வாறு பிறர் சபதம் செய்தல் தம் ஆற்றலைப் பிறர் உணரவேண்டும் என்பதற்காக ஆம். ஆனுல் சிவபெருமான் அங்ங்ணம் சபதம் செய்து தன் ஆற்றலைக் காட்டவேண்டிய நியதி இல்லை. அவனது அளவில் ஆற்றலை உலகம் அறிந்ததாகும். ஆகவேதான் * சூளாத முக்கண்மணியே' எனப்பட்டான். கேளாதவன் போல் வாளா இருக்கின்ற கேண்மை என்னே" என்னும் வரி, சுந்தரர் பாடியுள்ள

'மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளங் கிருப்பீர் திருவாரூர் வாழ்ந்து போகிரே'

என்னும் திருப்பாட்டை நினைவுபடுத்துகிறது.

மெய் அடியவர்கள் சுவர்க்க் நரகங்களை ஒன்ருகவே கருதுவர். இஃது உண்மை. இதனைத் திருவாதவூரர்,