பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ከ 20 திருவரும்பா'

"கொள்ளேன் புரந்தரன்மால் அயன்வாழ்வு குடிகெடினும் தள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல் லாதெங்கள் உத்தமனே”

என்று கூறுவதால் உணரலாம். இவரது திருவடியை ஒட்டியே நம் ஐயா, மீளா நரகத் தழுந்தினுமே என்று. அருளிச்செய்தனர் (99),

வளங்கன்றும் மாவனத் தீன்றதன் தாய்இன்றி வாடுகின்ற இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றி அந்தோ உளங்கன்றும் நான்செய்வதென்னே கருண உதவுகண்டாய் களங்கன்று பேர்அருள் கார்என்று கூறும் களத்தவனே.

(பொ. - ரை.) இறைவனது கழுத்தில் இருப்பது களங்கம் அன்று. அஃது இறைவனது பேரருளேக் காட்டு கின்ற கருணையான கரிய நிறம் என்று உண்மை ஞானம் தெளிந்தவர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற கழுத்தையுடைய வனே ! ஓர் இளமையான பசுங்கன்று தன்னே வளம் குறைந்த கரிய காட்டில் ஈன்ற தாயைக் காணுமல் வாடுவதுபோல் ஐயோ நான் இவ்வற்பமான உலக வாழ்க்கையில் உன் திரு. வருளைப் பெருமல் மனம் வெதும்புகின்றேன்; நான் இன்னது செய்வது என்பது தெரியாமல் இருக்கின்றேன். ஆகவே, எனக்கு உன் திருவருளைப் புரிவாயாக." (எ . து.)

(அ - சொ.) களங்கு - மாசு. களத்தவன் - கழுத்தை யுடையவன். கன்றும் - குறையும். மா - கரிப.

(இ . கு.) மா - உரிச்சொல், கண்டாய், முன்னிலை அசைச்சொல். (100.