பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவருட்பா

சுவாமிகளும் துவாதசாந்தப் பெருவெளியில் துரியம் கடந்த பரநாத, மூலத்தலத்து முளைத்த முழுமுதலே ' என்றனர். இறைவன் இந்தத் தானத்தில் இறைவியுடனும் திகழ் வான் என்னும் உண்மையினையும் குமர குருபரர் இருவரும் உற்றிடு துவாதசாந்தத்தொரு பெருவெளி ' என்று கூறி புள்ளதையும் உணரவும். இத்தத் தானத்தில் இறைவனே வணங்க வேண்டும் என்னும் குறிப்பைப் பரஞ்சோதியாரும்,

தென்தமிழ் ஆல வாய்த்தனிப்

பதியைச் சென்னிமேல் பன்னிரண் டும்பர் ஒன்றவைத் திமையா அம்கயல் கண்ணி

உடன்உறை ஒருவனே நினைந்தான். என்று அறிவித்துள்ளனர். இந்த அரிய குறிப்புகளே உள் ளடக்கியே இப்பாடலில் இறைவனைப் பன்னிரண்டு சொற் களால் விளித்தார் என்க. துவாதசாந்தத் தலத்து விளங்கும் பொருள், சிவமே அன்றி வேறன்று என்னும் கருத்தை வற்புறத்தவே செய்யுளின் ஈற்றில் சிவம் என்னும் சொல்லே அமைத்தே பாடலே முடித்துள்ளனர். சிவமெனும் சொல் சிவபெருமானத் தவிர்த்து வேறு எத் தேவர்க்கும் பொருந்தாது. இது குறித்தே அப்பர், 'சிவன் எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்' என்று அறுதியிட்டு உறுதிப் படுத்தினர்.

அருள் என்னும் சொல்லே அரசே, குன்றே முதலான சொற்களுக்கு அடைமொழியாகக் கொள்ளாமல் அரசே, அருள், குன்றே அருள் என்று கொண்டு, அருள் என்பதற்கு அருள்வா யாக என்று பொருள் காணினும் காணலாம். மன்று என்பதற்கு உலகமாகிய அரங்கு என்று பொருள் கூறினும் பொருத்தமே.

சிவன் அன்றி அருள் இல்லை என்னும் உண்மை,

அருள் அல்ல தில்லை அரன் அவன் அன்றி

அருள் இல்லை’ என்றும்,