பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 12 f

காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே சோற்றுக்கு மேல்கதி இன்றென வேற்றகம் தோறும்உண்போர்: துற்றுக்கு மேல்பெரும் தூறிலே ஆங்கென் துயரம்எனும் சேற்றுக்கு மேல்பெரும் சேறிலை காண்அருள் செவ்வண்ணனே.

(பொ - ரை.) சிவன் எனும் நாமம் தனக்கே உரிப செம்மேனி அம்மானே ! காற்றில் விட்ட பஞ்சுபோல அலைப் புண்டு மனம் சுழன்று சென்று சோற்றைத் தேடி உண்பதற்கு: மேல் வேறு கதி இல்லை என்று துணிந்து வெவ்வேறு வீடுகள் தோறும் சென்று உண்பர். பழிச் சொல்லுக்கு மேலே வேறு: என்ன பெரியபழி இருக்கிறது என்று திடம்கொண்டு திரிவர். அவர்களைப் போலவே நானும் துன்பச் சேற்றுக்கு மேலே சேறு இல்லை என்று திரிகின்றேன். ஆகவே என்னேக் கண் ணெடுத்துப் பார்த்து அவ்வாறு திரியாமல்படி திருவருள் புரிவாயாக." (எ . து.)

(அ - சொ.) கறங்க - சுழல. அகம் - வீடு. தூறு, துாற்று - பழிப்பு, பழிச் சொல். ஆங்கு போல.

(இ - கு.) வேறு-அகம். தோறும், இடைச்சொல் ஆங்கு, உவம உருபு.

(வி - ரை.) பெருந்தீங்கு புரிபவர்கள் அத்தீங்கினின்று. நீங்கி வழி வகை தேடாமல், அத்தீங்கைமேல் மேல் செய்து, கொண்டே இருப்பர். அவர்கள் அத் தீங்கால் பழிப்பு வருமே என்று சிறிதும் சிந்தியார். அவர்கள் வேளை க்குச் சோறு அகப்பட்டால் அதுவே சுவர்க்கமாக இருப்பர். அதற் காக வீடு தோறும் பிச்சை எடுக்கவும் மனம் கூசார். இந்தக் கருத்தே முதல், இரண்டாம், மூன்ரும் அடிகளில் பொருந்தி யுளது. சோறு என்னும் சொல்லே பயன்படுத்தற்குரியது. சாதம் என்பதன்று. இதனே உணர்தல் நன்று. ( 101)