பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to 22 திருவருட்பா

அந்தோ துயரில் சுழன்ருடும் ஏழை அவலநெஞ்சம் சிந்தோத நீரின் சுழியே இளையவர் செங்கைதொட்ட பத்தோ சிறுவர்தம் பம்பரமோ கொட்டும் பஞ்சுகொலோ வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.

(பொ. ரை.) எங்களுடைய சீரிய இரத்தினமே! ஐயோ, துன்பத்தால் சுழன்று ஆடுகின்ற இந்த அறிவீன னுடைய வருத்தமிக்க உள்ள மானது குளிர்ந்த" ஆற்றுநீரில் உண்டாகும் நீர்ச்சுழியோ? சிறு பிள் காகள் தம் அழகிய கையால் தொட்டு விளையாடும் பந்தோ? பம்பரமோ? அடிக் கப்படும் புஞ்சோ? காற்ருேடு சுழல்கின்ற துரும்போ? தான் என்னென்று கூறுவேன்? ' (எ து.)

(அ - சொ. ) மா . சிறந்த. அவலம் வருத்தம். சிந்து - ஆறு. ஒதம் குளர்ச்சி வந்து - காற்று.

(இ - கு.) r, உரிச்சொல். அந்தோ, இரக்கக் குறிப் பைக் காட்டும் ஓர் இடைச் சொல். கொல், அசைச்சொல். வந்தொடு +உழலும்.

(வி ரை.) படுக்கைக்காக அமைத்துக்கொள்ளும் பஞ்சு நாளடைவில் தன் மென்மைத் தன்மை குறைந்து விடும். அதனை மீண்டும் மெத்தென்றமைக்க அதனைப் பஞ்சு தொழிலாளன் அதற்கென அமைந்த கருவியால் அடித்துப் பஞ்சின் வன்மைத் தன்மையினேப் பேர்க்கி மென் ைcத் தன் மையதாய்ச் செய்வான் அந்தச் சமயத்தில் அது படும்பாடு பெரும்பாடாதலின், அதனை உள்ைர்ந்த நம் ஐயா கொட்டும் பஞ்சுகொலோ" என்றனர். ( 102)

பொன்வச மோபெண்க ளின் வச மோகடல் பூவசமோ மீன்வச மோஎனும் மெய்வக மோன் விதிவசமே தன்வச மேமலம் தன்வச மோஎன் சவலைநெஞ்சம் என்வச மோஇல்லை நின்வசம் நான் என ஏன்றுகொள்ளே.