பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 债至3

(பொ. - ரை.) "இறைவனே! வருத்தம் மிக்க என்மனம், என் வசத்தில் இருப்பதில்லை. அது பொன்னுக்கும் வசப் பட்டிருக்கிறதோ! பெண்களின் இன்பத்தில் வசப்பட்டிருக் கிறதோ! கடலால் குழப்பட்ட உலக இச்சையின் வசப்பட் டிருக்கிறதோ! ஒளி வயப்பட்ட உடல் மீது வைத்த ஆசையின் வயப்பட்டிருக்கிறதோ! தனக்குத்தானே வயப்பட்டிருக் கிறதோ! ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களின் வயப்பட்டிருக்கிறதோ எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ருலும், நான்மட்டும் உன் வயப்பட்டிருக்கின்றேன். ஆகவே, என்னை ஏற்றருள வேண்டும் ' (எ . து.)

(அ - சென்.) ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்வாயாக, பூ - பூமி. மின் - ஒளி. மெய் - உடல். மலம் - ஆன்மா வைப் பற்றி இருக்கும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள். சவலை - வருத்தம், மெலிவு.

(இ . கு.) ஏற்று என்பது என்று என்ருயது மெலித்தல் விகாரம். ஒகாரம் அனைத்தும் ஐயப் பொருள் தந்து நிற்கின்றன.

(வி ரை.) நம் ஐயர் ஈண்டு அலையும் மனத்தின் தன் மைகளே அழகாக இப்பாட்டில் எடுத்துக்காட்டி யுள்ளனர்.

நானடங் கதொரு நகள்செயும் குற்ற நடக்கைஎல்லாம் வானடங் காதிந்த மண்அடங் காது மதிக்கும் அண்டம் தானடங் சுதெங்கும் தான் அடங் காதெனத் தான் அறிந்தும் மானடம் காட்டும் மணி என ஆண்டது மாவியப்பே.

(பொ. ரை.) நான் சிறிதும் அடங்காமல் ஒரு நாளில் செய்யும் குற்றமாகிய நடத்தைகளே எல்லாம் சிந்தித்துப் பார்த்தால், அக்குற்றத்தின் பெருக்கம், ஆகாயம் அளவுக்கும் மேற்பட்டிருக்கும். இந்த உலகப் பரப்பிற்கும் மிகுதியாக