பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருவருட்பா

இருக்கும். எல்லாராலும் ஆராயப்படுகின்ற மேல். உலகங் களுக்கும் அப்பாலும் பெருகி மிக்கு இருக்கும். ஏன் ? எந்த இடத்திலும் அக்குற்றத்தின் பெருக்கம் அளவுக்கு மிஞ்சியே. இருக்கும். இந்த அளவுக்குப் பெருங் குற்றம் மிகுந்தவன் நான் என்பதை அறிந்திருந்தும், மகத்தான நடனத்தைப் புரிகின்ற மாணிக்கம் போன்ற கூத்தப் பெருமான் என்ன ஆட்கொண்டானே! அந்த அருட் செயல் வியப்புக்கு இடமாகும் அன்ருே ' (எ . து.)

(அ - சொ.) நடக்கை - நடத்தை. வான் - ஆகாயம். மதிக்கும் - ஆராயும். அண்டம் . மேல் உலகம். மணி - இரத்தினம் போன்ற சிவபெருமான். மா - மிக்க.

(இ கு.) மா - உரிச்சொல். மா நடம் என்பது மானடம் என்றயது எதுகை நோக்கி என்க.

(வி - ரை.) மால் + நடம் எனப் பிரித்துக்காண்போர்க்கு ஆனந்த மயக்கத்தை விளைவிக்கும் நடனம் என்று பொருள் காணினும் பொருத்தம் ஆகும். (104)

பம்பா யினும் உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனப்பால் வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வேருட்சிகடாத் தாம்பா யினுஒரு தாம்பாயி னும்கொடு தாம்பின்செல்வார், தேம்பாய் மலர்க்குழல் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.

(பொ. - ரை.) " ജൂങ്ങുഖകേ ! Lഓക് உள்ளவர்கள், பாம்பு கொடியதாக இருந்தாலும் அதற்குப் பால் கொடுப்பர்; வீட்டில் உள்ள வேப்பமரத்தை வெட்டி விடாமல் அதனை வளர்ப்பார்கள்; தாம் வளர்த்த மருட்சி கொண்ட எருது தம் மீது பாயவரினும் அதன்பின் ஒரு தாம்பு கயிற்றைக் கொண்டு சென்று அதனைக் கட்டவே முற்படுவார்கள். அவ்வாறு இருக்க என்னேயும் கூந்தலில் சூடும் தேன் ஒழுகும் மலரில், உள்ள காம்பைப் போல ஏற்று உன் திருவடியில் அனைத்துக் கொள்வாயாக." (எ . து.)