பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1-25

(அ.சொ. மனப்பால் வீட்டில். வெருட்சி மருட்சி. தாம்பு. கயிறு. தேம் - தேன். குழல் - கூந்தல்.

(இ.கு.) பாம்பாயினும், வெம்பாயினும் என்பனவற்றில் உள்ள உம்மைகள் இழிவு சிறப்பு உம்மைகள். மனப்பால் என்பதன் பால் ஏழன் உருபு, கடா + தாம்.--பாயினும் எனப்பிரிக்க. கொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம். என்னேயும் என்பதில் உள்ள உம்மை இறந்தது. தழுவியஎச்ச உம்மை.

(வி ரை.) தாம் தள்ளத் தக்கவராயினும் இறைவர் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் வேண்டுகோள். (105)

நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர் பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப்பழமும்கொள்ளத் தெருப்புக்கு வாரொடு சேர்கில்என் ஆம்இச் சிறுநடையாம் இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்தில்என்ன்ே.

(பொ. ரை) இறையவனே! நெருப்பில் வைக்க வரட்டியையும், கூழுக்கு உப்பையும் தேடிச் செல்பவர்கள், பருப்புச் சோற்றிற்கு நெய்யும், நல்ல பசும்பாலுடன் வாழைப் பழத்தையும் சேர்த்து உட்கொள்ளத் தெருவில் செல்வாருடனும் சேர்ந்து போல்ை தான் என்ன? நல்லது தானே. அவர்களைப்போல் நானும் இந்த உலகில் சாவா நிலையில் வாழும் இருப்புக்காகச் சிவயோ கியர் பின் சென்ருல் என்ன? அது நல்லது தானே?” (எ . து.)

(அ - சொ.) முட்டை - எரிமுட்டை (வரட்டி). நேடி . தேடி. எய்தில் - அடைந்தால்.

(இ . கு) புகுவார் என்பது புக்குவார் என்ருயது விரித்தல் விகாரம் பற்றி என்க.