பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 26 திருவருட்பா

(வி - ரை.) உலகில் ஏழைகளுக்கும் செல்வர்களுக்கும் துன்பம் இருந்தே தீரும். 'ஏழைகள் கூழுக்கு உப்பில்லை. என்பர். செல்வர் பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பர். இதனை ஒரு புலவர் அழகுறப் 'பாலுக்குச் சர்க்கரை இல்லை என்பார்க்கும், கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும், பல்லக் கின் மீது நன்கு அமரப் பஞ்சால் ஆகிய அணை இல்லை என் பார்க்கும், காலுக்குச் செருப்பு இல்லை என்பார்க்கும் விசனம் ஒன்றே" என்று கூறியுள்ளார். இந்தக் குறிப்புத்தான் நம் ஐயா முதல் இரு வரிகளில் குறிக்கவந்த கருத்து. சிவயோகி யர் பால் சொல்வதல்ை ஏற்படும் நன்மையைத் திருமந்திரம்,

'சிவயோக ஞானி செறிந்த அத் தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல்இயல் கானும் பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே”

என்று கூறுகிறது. ஆகவேதான் நான் சிவயோகர் பின் எய்தில் என்னே' என்று விவுைகிருர் நம் ஐயா. உள்ளுவ எல்லாம் உயர்வு உள்ளுக என்பது நம் ஐயாவின் எண்ணம் என்பதை நன்கு உணரவும். நம் ஐயா சாகா நிலையினை எய்த நோக்கம் கொண்டவர் ஆதலின் 'இருப்புக்கு வேண் டிய நான் சிவயேசகர். பின் எய்தின் என்னே" என்று கூறுவார் ஆயினர். (106)

ம்ெமத மாட்டும் அயோய்என் பாவி இடும்பைநெஞ்சை மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய் அனல்கண் விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னே விட்டஅதன் வெம்மதம் நீங்கல்என் சம்மதம் காண்எல் விதத்தினு மே.

(பொ. - ரை.) 'எந்தச் சமயங்களாயினும், அச் சமயங். களின் பாச ஞானங்களால் அறியப்படாத அவ்வளவு அருமை வாய்ந்த இறைவனே! எனது துன்பம் மிக்க இந்தப் பாவி