பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 27

நெஞ்சை மூன்று மதங்களைப் பொழிகின்ற யானையின் காலில் வைத்து மிதிக்கச் செய்வதும், மிக்க தீயில் வைத்துப் பெருந் துன்பத்திற்கு உள்ளாக்குவதும், வெட்டிப் போடுவதும் நன்றே. உன்ன விட்டு விலகிய அந்த நெஞ்சின் கொடிய செருக்கு எவ்வாறேனும் நீங்கினுல் அதுவே எனக்குச் சம்மதம் ' (எ . து.)

(அ . சொ.) மதம்மாட்டு - எந்த மதங்களிலுைம் இடும்பை - துயரம். இடறினும் - மிதிப்பினும். மொய் - மிக்க. விம்மதம் - துன்பம்.

(இ . கு.) மாட்டு, ஏழன் உருபு. அனல்கண், இதில் உள்ள கண் ஏழன் உருபு. காண், முன்னிலே அசைச்சொல்.

(வி - ரை.) எந்த மதத்தினராயினும் செருக்குடன் நான் இறைவனேக் காண்போம் என்று கூறின், அவர்களால் இறைவன் காணப்படாதவன் ஆவான். இந்த உண்மையினைத் திருவாதவூரர்,

முேறை உளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத் துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தந் திரத்தில் காண்டும்என் றிருந்தோர்க்கு அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் '

என்று அறிவுறுத்தி யுள்ளனர். இந்தக் கருக்துகளேயே நம் ஐயா மிகச் சுருங்கிய முறையில் "எம்மத மாட்டும் அரியோய் என்று உணர்த்திக் காட்டினர்.

மும்மதமாவன, கன்னத்திலிருந்து வரும் மதம், மண் டையிலிருந்து வரும் மதம், குறியினின்று வரும் மதம் ஆக மூன்ரும். 07)