பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 28 திருவருட்பா

கல்லாத புந்தியும் அந்தோநீன் தாளில் கணப்பொழுதும் நில்லாத நெஞ்சமும் பெல்லாத மாயையும் நீள்மதமும் கொல்லாமல் கொன்றெனத் தின்னுமல் தின்கின்ற கொள்கையைஇங் கெல்லாம் அறிந்த உனக்கெவி யேன்.இன் றிசைப்பதென்னே.

(பொ - ரை.) இறையவனே! ஐயோ, நின் திருப்புக ழைக் கற்காத புத்தியும், உன் திருவடிகளில் சிறிது நேரமாகி லும் பொருந்தாத மனமும், கொடிய உலக மயக்கமும், மிக்க ஆணவமாகிய செருக்கும், என்னேக் கொல்லாமல் கொன்று, தின் மைல் தின்கின்ற இந்த நிலைகளே எல்லாம் தெரிந்த உனக்கு எளியவகிைய நான் இன்று சொல்லக் கூடியது என்ன இருக்கிறது? (எ - து.)

(அ - செ.) புந்தி - புத்தி. கணப்பொழுது - சிறிது நேரம். மதம் - செருக்கு. இசைப்பது - சொல்வது.

(இ . கு.) புந்தி, புத்தி என்பதன் மெலித்தல் விகாரம். (வி - சை.) புத்தி, மனம், மாயை, மதம் ஆகிய இவை பெரிதும் துன்பப்படுத்தலின் மனம் நொந்து 'கொல்லாமல் கொன்று தின்னு மல் தின்று' என்று கூறலானர். (108)

தெவ்வழி ஒடும் மனத்தேனுக் குன்தன் திருஉளம்தான் இவ்வழி ஏகென் றிருவழிக் குள்ளிட்ட தெவ்வழியோ அவ்வழி யேவழி செவ்வழி பாடதின் ருடுகின்ருேய் எவ்வழி நீர்ப்பு:ணக் கென்னே செயல்இவ் வியன்நிலத்தே.

(பொ-)ை.) செவ்வழிப் பண்ணைப்பாட அப் பண்ணுக்கு ஏற்பத் திருநடம் புரிகின்ற நடராசப் பெருமானே ! பகை வளர்தற்குக் காரணமான வழிய்ே போகும் உள்ளம் படைத்த எனக்கு, உனது திருவுள்ளம் இந்த வழியே செல்க என்று கட்டளே இட்டது. எந்த வழியோ, அந்த வழிதானே நல்வழி ஆகும். இந்தப் பரந்த உலகில் நீர் வழியே செல்லும்