பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 29

படகிற்கு இது கொடிய வழி என்று எண்ணிச் சும்மா இருக்க எப்படி முடியும் ? நீர் போகிற வழியில்தானே அப் படகு போகவேண்டும்? ' (எ . து.)

(அ - சொ.) தெவ் - பகை. புணே . படகு. வியன் . பரந்த,

(இ - கு) வியன் . உரிச்சொல்.

(வி . ரை.) செவ்வழி என்பது தமிழில் உள்ள இராகப் பெயர்களில் ஒன்று. இக்காலத்தில் கர்நாடக இசை என்னும் பெயரால் வழங்கப் பெறும். தோடி, பைரவி, பூபாளம் போன்றவை, அக்காலத்தில் இல்லே. பண்டைக் காலத்தில் தமிழ்ச் சுரங்கள் ஏழு. அவையே குரல், துந்தம்: கைக்கிளை, உ,ை இனி, விளரி, தாரம் என்பன, இவற்றிற்குப் பதிலாக இக்காலத்தில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் வடமொழிப் பெயர்கள் வழங்கப் படுகின்றன. பண்டைக் காலத்தில் அராகம் எனப்படும் தமிழ்ச் சொல்லே இப்போது ராகம் எனப்படுகிறது. இக் காலத்தில் சுருதி எனபது அக்காலத்தில் கேள்வி எனப்பட்டது.

தமிழ் மொழியில் பதினுேராயிரந்துத் தோள்ளாயிரத்துத் நொண்ணுற்டுென்று இசை வகைகள் இருந்தன என்பது சிலப் பதிகார உாையால் தெரிகிறது. இதுபோது நூற்றுமூன்று பண் களின் பெயர்கள் மட்டும் தெரியவருகின்றன. இவற்றுள் ஏறக் குறைய இருபந்துதான்கு பண்கள் மட்டும் இடம் பெற்றுள் ளன.

பண்களுக்குரிய பெயர்கள் குறிஞ்சி, கொல்லி,

தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புற

நீர்மை என்பனவாக உள்ளன. இத்தகைய தமிழ்ப் பெயர்கள்

எல்லாம் மறைந்து வெவ்வேறு பெயர்கள் வழங்கி வருகின்

றன. ஆலத்தியே இக்காலத்தில் ஆலாபனம் எனப்படுகிறது.

சீர்த்திதான், கீர்த்தனை ஆயிற்று. திருப்புகழைக் கீர்த்தனே

9