பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 5

" அருளால் அமுதப் பெருங்கடல் ஆடடி

அருளால் அடிபுனைந் தாவமும் தந்திட் உருளான ஆனந்தத் தாரமு: தூட்டி அருளால் என்னந்தி அகம்புகுந் தானே ’’ என்றும் திருமந்திரம் கூறுதல் காண்க. (1)

துணியால் உளம்தளர்ந் தந்தோ துரும்பில் சுழல்கின்றேன் இனியா கீனும்இரங் காதோநீன் சித்தம்எந் தாய்இதென்ன அணியாய மோஎன் அளவில் நீன் பால்தண் அருள்.இலேயே சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே?

(பொ , ரை.) என் தந்தையே! உன் அருள் கிடைக் குமோ? கிடைக்காதோ? என்னும் அச்சத்தால், ஐயோ! நான் மனம் தளர்ந்து காற்றில் அகப்பட்ட துரும்புபோல் சுழல்கின் றேன். உன் மனம் இனியாகிலும் என்மீது இரக்கம் காட் டாதோ? நீ இன்னமும் இரக்கம் காட்டாதது அணியாயமாக இருக்கிறதே. என் அளவில் உன்னிடம் நல் அருள் இல்லை போலும்! உனக்கு ஒருவேளை சனிபோன்ற என் தீவினை உன்னிடம் வந்து எனக்கு அருள் செய்ய வேண்டா என்று போதிக்கின்றதோ? என்ன என்று சொல்வது? ஒன்றும் புரிய வில்லையே." (எ . து).

(அ . சொ ) எந்தாய் - என் தந்தையே. துனி - அச் சம். தண் அருள் . நற் கருணே. சாற்றுவது - சொல்வது. என் கொல் . என்ன? நின் பால் - உன்னிடம்.

(இலக்கணக் குறிப்பு) என் தந்தாய, என்பது எந்தாய் என்ருனது மரூஉ வழக்கு. நின்பால் என்பதில் உள்ள பால், ஏழாம் வேற்றுமை உருபு. என்கொல் என்பதில் உள்ள கொல், அசைச் சொல். வினப் பொருளைத் தரும் இடைச் சொல் என்று கூறுவாரும் உளர். என் என்பதே வினவாதலின், கொல் வெறும் அசைச் சொல்லே ஆகும்.(2)