பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 33

வந்து தன் குழந்தைக்குத் தருவாள். நானும் உனக்கு ஒரு குழந்தை. இந்த ஏழைக் குழந்தை அழுகின்ற முகத்தைப் பார்த்தும் நீ என்மீது இரக்கம் காட்ட வில்லையே! (எ . து.)

(அ சொ.) எம்மான் - எம்பெருமானே. ஆற்றேன் . பொறுக்க முடியாதவனுய் உள்ளேன், சேய் - குழந்தை. மா - பெரிய அமுது . உணவு. ஏற்ருயினும் - பிச்சை

o எடுத்தாகிலும்.

(இ கு) வயிறு + எரிக்கு + ஆற்றேன். மா - உரிச் சொல். கொல், அசை, ஓ, விஞ) (1 1)

ஒயாக் கருண முகிலே துதல்கண் ஒருவlன்பால் தோயக் கொடியவெம் நெஞ்சத்தை நான்சுடு சொல்லச்சொல்லி வாயால் சுடினும் தெரிந்தில தேஇனி வல்வடவைத் தீயால் கடினும்என் அந்தோ சிறிதும் தெரிவதன்றே.

(பொ. ரை.) இடை விடாமல் உயிர்களுக்குப் பெருங் கருணையைப் புரிந்து வரும் மேகமே நெற்றியில் கண் படைத்த ஒப்பற்ற ஒருவனே ! உன் அன்பில் படியாத மிக்க கொடிய இந்த மனத்தை நான் வெம்மையான மொழிகளைச் சொல்லி வாயால் சுட்டாலும் அதற்குக் கொஞ்சம் கூடத் தெரியவில்லையே. இப்பழான கொடிய மனத்தை இனி வன்மை மிக்க வடவசமுகாக்கினி என்னும் ஊழித் தீயால்ை சுட்டால்தான் என்ன? ஐயோ! அதற்குக் கொஞ்சம் கூடத் தெரியவில்லையே. (எ . து.)

(அ - சொ.) முகில் - மேகம், நுதல் - நெற்றி, ஒருவ ஒப் பற்றவன்ே, நின்பால்-உன்னிடம். தேர்யா.மனம் பொருந்தாத அல்லது அன்பு பொருந்தாத.

(இ - கு.) முகில், உவமை ஆகு பெயர் - நின்பால். ஏழன் உருபு, கொடிய வெம், ஒரு பொருள் பன்மொழி.