பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 135

மலறி யான்மல ரோன்அறி யான்மக வான் அறியான் காலநி யான்மற்றை வானேர் கனவினும் கண்டறியார் சேலறி யாவீழி மங்கைபங் காநீன் திறத்தைமறை நாலறி யாளனில் நான் அறி வேன்.எனல் நாண் உடைத்தே.

(பொ , ரை. சேல்மீன் கூடத் தெரிந்து கொள்ள முடியாத பிறழ்ச்சி அழகும், மகிழ்ச்சியும் கொண்ட கண் களை யுடைய பார்வதிதேவியைப் பக்கத்தே கொண்டுள்ள சிவ பெருமானே ! உன்னைத் திருமால், பிரான், இந்திரன் காற்று மற்றும் உள்ள தேவர்களும் தம் த கனவிலும் கூடப் பார்த் தறியார். உன் உண்மைத் தன்மையை நான்கு வேதங் களும் அறியமாட்டா. இந்த நிலையில் நான் உன்னே அறிவேன் என்று கூறுதல் எனக்கே வெட்கமாக இருக்கிறது”. (எ. து.)

(அ - சொ.) சேல் - சேல் மீன். மலரோன் த மரை மலரில் இருக்கும் பிரமன், மகவான் - இந்திரன், கால் . காற்று. மற்றைய . ஏனைய, வானேர் . தேவர், திறம் . உண் மைத் தன்மை. மறை - வேதம் நாண் வெட்கம்.

(வி. சை.) மங்கை ஈண்டுப் பார் வகி தேவியார். அவள் விழி அழகிலும், பிறழ்ச்சியிலும் சேல் மீனினும் சிற புடைத் தாய் இருந்தமையின் சேல் அறியா விழி என ப்பட்டது. மற்றை வானுேர் முப்பத்து முக்கோடி தேவர்கள் அ ர்கள் பன்னிரு சூரியர்கள், பதிைெரு உருத்திரர்கள், எட்டு வசுக் கள், சந்திர சூரியர்கள் இருவர். முப்பத்து முக்கோடி என்ப தற்கு முப்பத்து மூன்று கோடி என்பது பொருள் அன்று. கோடி என்பது ஈண்டு எல்லை என்னும் பொருளது அகவே முப்பத்து முக்கோடி என்பது முப்பத்து மூன்று எனனும் எல்லைக்குள்பட்டது என்னும் பொருளது. மற்றைவாைேர்கள் என்பதற்கு னட்டுத்திசைப் பாலகர்களுள் இந்திரன் காற்று