பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவருட்யா

எனும் இருவர் நீங்கலாக ஏனைய அறுவர் என்றும் பொருள் கூறலாம். அவர்கள் அக்கினி, யமன், நிருதி, வருணன் குபேரன், ஈசானன். என்பவர்கள்.

மறைநான்காவன இருக்கு யசுர், சாமம், அதர்வணம் என்பன. இவை வடமொழி தேதங்கள். இவற்ருல்தாம் இறைவன் அறியப்படாதவன் ஆவான். தமிழ் மறையில்ை இறைவன் அறியப்படுபவன் ஆவான். இந்த உண்மை யினத் திருஞான சம்பந்தர் தம் முதல் திருப்பதிகத்தின் முதல் திருப்பாட்டிலேயே பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே என்று தமிழ் மறைவழித் தாம் கண்டதைக் கூறி விளக்குதல் காண்க. இது குறித்தே திருவிகளயாடல் புராணம் தமிழ் அறியும் பெருமானே' என்று இறைவனைக் குறிப்பிடுகிறது.

தமிழ் வேதங்கள் ஆவன அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கைப் பற்றித் தனித்தனியே கூறும் நூல் களாம். அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய தமிழ் மறை கஅளயே இறைவர் கல்லால விருட்சத்தின் கீழ் உரைத்தருளி ஞர் என்பதை மணி மொழியார்,

அருந்தவர்க் காலின்கீழ் அறம்முதலா நான்கனயும் இருந்தவர்க் கருளுமது எனக்கறிய இயம்பேடி அருந்தவர்க் கறம்முதல் நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவர்க் குலகியற்கை தெரியாகாண் சாழலோ

என்று உணர்த்துமாற்ருல் உணர்க. (113)

து ரு

ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மையொரு கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம்மிக்க நீறிட்ட மேனியும் தான்காணும் நாள் என் நிலத்தலைமேல் ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.