பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1.37

(பெண் . ரை.) கங்கை ஆற்றைக் கொண்ட சடையும், நடனம் புரிகின்ற திருவடியும், இறைவிக்குத்தன் ஒரு பாகத் தைப் பகிர்ந்து கொடுத்துள்ள பாகமும், இணைத்தும் கட்டப் பட்டது போன்றுள்ள கொன்றைமலரும் அழகுமிக்க, திருநீறு பூசிய திருமேனியும் நான் காணும் நாள் எந்நாளோ, அந் நாளில் என் நிலையை நான் அறிந்து என் கைகள் என் தலை மேல் தாமே ஏற, அந்தக் காட்சியை ஆணவப் பேய்கள் கண்டதும் என்னைப் பிடித்திருந்த பிடிப்பில் இருந்து போய் விடும்.’’ (எ . து)

(அ - சொ.) வேணி - சடை. ஆட்டு - நடனம். கூறு - பகுதி. கோலம் - அழகு. நீறு - திருநீறு. மேனி - உடம்பு.

(இ . கு.) ஆட்டு-இட்ட.

(வி - ரை.) கொன்றைமலர் மலர்ந்திருக்கும் காட்சி இயற்கையாகவே மலர்கள் ஒன்ருேடு ஒன்று இணைக்கப்பட்ட மாலைபோல் காணப்படும். இது குறித்தே "கோத்திட்ட கொன்றை எனப்ப்ட்டது. நீறு இடுவதல்ை அழகு மிகுதலின் 'கோலம் மிக்க நீறு இட்டமேனி' எனப்பட்டது : சுந்தரம் ஆவது நீறு ' எள்பது சம்பந்தர் வாக்கு. இது குறித்தே நீறு இல்லா நெற்றியாழ்' என்றனர் ஒளவையார். ஆண வத்தின் குணம் பலவாதலின், அதனை ஆண வ்ப் பேய்கள் எனப் பன்மையில் கூறினர். இந்த ஆணவமலத்தின் குண பேதங்களே உமாபதி சிவம் விகற்பம், குரோதம், மோகம், கொல, மதம் என்று கூறுவர். மேலும், இதனைச் சிவஞான சித்தியார்,