பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 88 திருவருட்பா

ஒன்றதாய் அநேக சக்தி உடையதாய் உடய்ை ஆதி அன்றதாய் ஆன்மா வின் தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத் திருத்து வத்தை திகழ்த்திச்செம் பினில்க

[ளிம்பேய்ந் தென்றும் அஞ் ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. என்று கூறுகிறது. (114)

அல்உண்ட கண்டத் தரசேதின் சீர்த்தி அமுதம் உண்டோர் கொல் உண்ட தேவர்தம் கோள் உண்ட சீiஎனும் கூழ்உண்பரோ சொல் உண்ட வாயினர் புல்உண்ப ரோஇன் சுவைக்கண்டெனும் கல்உண்ட பேர்கருங் கல்உண்ப ரோஇக் கடல்இடத்தே.

(பொ. - ரை.) இருள் நிறமான் விடத்தை உண்ட கழுத்துடைய நீலகண்டப் பெருமானே! இந்தக் கடல் குழ்ந்த உலகில் உன் புகழாகிய அமுதத்தைப் பருகியவர்கள், இறப்புக்கு உரியவர்களாகிய தேவர்களின் பொய்யான சீர் ஆம் உணவை உண்பரோ? நெல் அரிசி உணவை உண்ட வர்கள் புல் உணவை உண்பரோ? இனிய சுவையுடைய கற் கண்டை உண்டவர்கள் கருங்கல் கல உண்பரோ " (எ . து.)

(அ - சொ) அல் - இருள். கண்டம் - கழுத்து. கீர்த்தி புகழ். கொல் - இறப்பு. கோள் பொய். கூழ் . உணவு. சொல் - நெல் (நெல் அரிசி) கண்டு - கற்கண்டு.

(இ - ரு. அல் - ஆகுபெயர்.

(வி . ரை.) அல் ஈண்டு இருள் எனும் பொருளேத் தருத லின்றி விடத்தை உணர்த்தலின் பண்பாகு பெயர் ஆயிற்று. தேவர்களின் வாழ்வு பொய் வாழ்வு. இது குறித்தே இந்த வாழ்வை உண்மை அன்பர்கள் சிறிதும் விரும்பார். மணி