பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 189

வாசகரும் கொள்ளேன் புரந்தரன்மால் அயன் வாழ்வு ’’ என்று கூறுவார் ஆயினர். வீரவாகு தேவர் முருகப்பெரு மானே வேண்டிய வரம் இன்னது என்பதைக் கந்த புராணம்,

கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலே இந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மால யன் பெறு பதத்தையும் பொருள் என மதியேன்

சால நின் பதத் தன் பையே வேண்டுவன் தமியேன்.

என்று கூறுதல் காண்க. இவற்றை உட்கொண்டே நம் ஐயா, கொல் உண்ட தேவர்தம் கேள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ ’ என்றனர். ( . 15)

காரே எனுமணி கண்டத்தி னுன்பெiன் கழலைஅன்றி யாரே துணை நமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு நீரே எனினும் தரற்கஞ்சு வாரோடு நீயும் சென்று சேரேல் இறுகச் சிவாய நம எனச் சிந்தைசெய்யே.

(பொ. ரை.) அறிவு இல்லாத மனமே! கார் மேகம் போல் கருத்துள்ள நீலமணி போன்றுள்ள கண்டத்தை யுடையவனுடைய அழகிய் திருவடிகளே அல்லாமல் வேறு யார் நம்க்குத் துனேயாவார்? உலக மக்கள், கழுவி வெளியே ஊற்றும் நீரைக் கூடக் கொடுக்க மாட்டார்கள். ஆகவே, நீ உள்ள இடத்தை விட்டுச் நீங்கிச் சென்று உலோபிகளே அடையாதே உறுதியாக எப்போதும் சிவாயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையே மனத்தில் எண்ணிக்கொண் டிருப்பாயாக’’ (எ . து.)

(அ. சொ.) கார் . கரிய மேகம். மணி - நீலமணி. கண்டத்தினன் - கழுத்துடைய சிவபெருமான். பொன் .