பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவகுட்பா

அழகிய. கழல் - வீரத்தண்டை அணிந்த பாதம். இறுக -- உறுதியாக.

(இ - கு.) கழல் - தானி ஆகுபெயர். கார் . பண்பாகு. பெயர்.

(வி - ரை.) இறைவன் கழுத்து, கரு நிறமான விடத்தைக் கொண்டிருத்தலின், காரே எனும் மணி கண்டத்தினன் எனப்பட்டான். கழல் எனும் சொல் வீரத்தண்டையைக் குறிக்கும். அவ்வீரத்தண்டை இங்குத் திருவடிகளே உணர்த்தி நிற்கிறது. சிவாயநம என்று சிந்திப்பார் க்கு அபாயம் ஒருநாளும் இல்லை ஆதலின், * இறுகச் சிவாயநம எனச் சிந்தை செய்யே என்றனர். உலகில் மக்கள் பிறர்க்கு ஈய மனம்துணியார். இதனைத். திருவள்ளுவர் வெகு அழகாக, கையைக் கழுவியவர்கள் அக் கையைக் கூட உதரமாட்டார்கள். அதற்குக் காரணம் அக் கையில் உள்ள நீர் கூடப் பிறர் மீது பட்டு அவர்கள் உடல் குளிர்ந்து விடும் என்பதனுல் ஆகும் என்பதாம். இந்தக் கருத்தில் 'ஈர்ங்கை உதிரார் கயவர்' என்று மூன்று சொற்களால் கூறிச் சென் ருர். மற்ருெரு புலவர் ' சுண் ணும்பு பட்ட இலையும் கொடார் கவிசொன்னவர்க்கே ' என்று கூறி யுள்ளனர். இன்ைோன்ன காரணங்களால்தாம் 'கழுநீரே எனினும் தரற்கு அஞ்சுவர் ' என்றனர். (116)

வலைப்பட்ட மான் என :ெ1ள்பட்ட கண்ணியர் மையல்என்னும் புலப்பட்ட பேய்க்கு விலப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப இலப்பட்ட இம்மனம் அந்தோஇவ் ஏழைக்கென்றெங்கிருந்து தலப்பட்டதே இதற்கென்செய்கு வேன்முக்கன் சங்கனே.