பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 1 4 ;

(பென் . ரை.) மூன்று கண்களையுடைய சிவசங்கரனே ! வலைவில் அகப்பட்ட மானைப்போல, வாள் போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் போகம் என்னும் இழி செய லாகிய பேய்க்கு அடிமைப்பட்ட நான், என் அறிவு கெட்டு வருந்தக் காற்ருல் அகலப்பண்ணும் இலபோல் அலையும் இந்த மனம் ஐயோ, இந்த அறிவீனனுக்கு எப்போது எங்கிருந்து வந்து என்னுடன் இணைந்ததோ தெரிவில்லையே! இதற்கு நான் என்ன செய்வேன்? இன்னது செய்வது என்பது தெரிய வில்லையே” (எ . து.)

(அ . சொ.) புலே . கீழ்மை. இழிவு. 1ாதி - அறிவு, தலைப்பட்டது . சேர்ந்தது.

(வி.ரை.) மாதர்களின் பார்வை கூர்மையானது; துன்பம் தருவது. ஆதலின் வாள்பட்ட கண் எனப்பட்டது. பெண் மையல் அறிவை மயங்கச் செய்தலின் மையல் என்னும் புலப்பட்ட பேய்" என்று கூறப்பட்டது. ஏழை ஈண்டுப் பொருள் இன்மை காரணமாக அமைந்த சொல் அன்று. அறிவு இன்மை காரணமாக அமைந்த சொல். (117)

குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளைக் குரங்குக்கிங்கே வருந்தா னவம்என்னும் மானிடப் பேய்ஒன்று மாத்திரமோ பெருந்த மதம்என் நிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய் திருந்த அதன்குதிப் பென் ஒரு வாய்கொண்டு செப்பதே.

(பொ. ரை.) என் தந்தையே! குழந்தை போன்ற எனது வாட்டம் மிக்க மனம் எனும் சிறு குரங்கு, ஆணவம் என்னும், மானிடப் பேயால் வருந்துகின்றது. இந்த வாட்டம் மட்டுமா ? பெரிய சோம்பல் என்னும் இராட்சசப் பேயும் அம்மனக் குரங்கைப் பிடித்துக்கொண்டது. இந்த இரண்டும்