பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 148

மணிக்கு ஒப்பான கடவுள் மணியே! ஒரு முறை வன்மை மிக்க அழகிய மதுரைமர் நகரில் மாணிக்கத்தை விற்றுச் சிறப்புடன் விளங்கும் தெய்வங்களின் நாயகனே' (எ . து.)

(அ . செ.) பெண்மணி - உமாதேவி. பெற்றி . தன்மை. விண்மணி - ஆகாயத்தில் விளங்கும் சந்திர சூரியர். ஒருகால் - ஒருமுறை. மணி - மாணிக்கம். கூடல் - மதுரை.

(வி . ரை.) இறைவனுடைய கண்கள் மூன்றனுள் வலக் கண் சூரியனுக்கு ஒளியையும், இடக்கண் சந்திரனுக்கு ஒளியையும், நெற்றிக்கண் அக்கினிக்கு ஒளியையும் தருவ்ன. இந்த உண்மையினைப் பரம வைணவரான பாரதம் பாடிய வில்லிபுத் தாராரும், 'கல்வணக்கி முப்புரம் எரித்த முக் கண்ணினன் வலக்கண் அளித்துளான் " என்று கூறி யுள்ளனர், இதன் பொருள் மேருமலயை வில்லாக வாேத்து முப்புரங்களே அழித்த மூன்று கண்களுடைய சிவபெருமானின் வலக் கண்ணுகிய சூரியன் பெற்ற பிள்ளே கர்னன் என்பது ' இந்தக் குறிப்பைச் சிவப்பிரகாச சுவாமிகளும் கண்களோ ஒன்று காலேயில் காணும். மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும் பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும் ' என்று கூறினர். இந்தக் கருத்துகளே ஈண்டு விண்மணியான விழி ' எனப்பட்டது.

மதுரையில் வீரபாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக் குப் பட்டத்தரசியே அன்றிப் பல காதல் கிழத்தி யரும் இருந்தனர். அவர்களுள் பட்டத் தரசிக்கு ஒரு பிள்ளை பீறந்தது. காமக் கிதத்தியர்களுக்கும் பிள்ளே கள் பிறந்தனர். அரசன் வேட்டைக்குச் சென்றபோது அவனே ஒரு புலி கொன்று விட்டது. அடுத்துப் பட்டத்துக்கு உரியவன் பட்டத்.