பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவருட்பா

தரசியின் மகனே ஆவான். அதன் பொருட்டு அரச முடியைத் தேடுகையில், ஆஃது இருக்கவேண்டிய இடத்தில் இல்லாமல் போயிற்று. இதனைக் காமக் கிழத்தியர்களின் மைந்தர்கள் களவாடிக்கொண்டு சென்றனர். ஆகவே, வேறு மணிமுடி செய்ய மந்திரிமார்கள் முனைந்தனர். அம். முடிக்கு ஏற்ற நவரத்தினங்களை எங்குத் தேடுவதென்று வருந்திப் பட்டத்துக்குரிய இளவரசனுடன் மதுரைச் சொக்க லிங்கப் பெருமான் ஆலயத்திற்குப் புறப்பட்டனர். இள வரசனுக்கு இறைவர் திருவருள் புரிய நவரத்தன வணிகர் போல் வேடங்கொண்டு மணிப் பொதியுடன் எதிரில் வந்தனர். வந்தவர் தம்மிடம் அரசமுடிக்கேற்ற ஒன்பது வகை மணிகள் உண்டெனக் கூறி அந் நவரத்தினங்களின் சிறப்பையும் குணங்களேயும் எடுத்து மொழிந்தனர். மந்திரி மார்களும் மைந்தனும் மகிழ்ந்து மணிவணிகனிடம் மணி களேப் பெற்றனர்.

இம்மணிகளைக் கொண்டு முடிசெய்து இளவரசனுக்கு மணிவணிகர் கட்டளே இட்டபடி அபிடேக பாண்டியன் எனப் பெயர் சூட்டி முடி புனேந்து மகிழ்ந்தனர். இதனைத் திருவிளையாடல் புராணத்துள் மாணிக்கம் வித்ற படலத்துள் விரிவாகக் காண்க. இந்த வரலாறே : ஒருகால் மணியைத் திண் மணிக் கூடலில் விற்ருேங்கு தெய்வசிகாமணியே : என்னும் வரியில் அமைந்துளது.

சிவபெருமானின் திருவடிகளில் திருமால் முதலியோர் தம் முடியால் வணங்குகையில், இறைவன் திருவடிகள் அவர்களின் முடிகளுக்கு மணிபோல் அமைதலின், தெய்வ

சிகாமணியே என இறைவன் குறிக்கப்பட்டான். ( i i 9)

ustammmmmm :