பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 7.

மனத் துய்மை இல்லாத தேவர்களின் தவறுகளைப் பொறுப் பவனே! ஒழியாத துன்பம் கொண்டுள்ள என் நீலயை இவ்வுலகில் உள்ள மக்கள் கண்டால், இரக்கம் கொள்வர். என் துயரைக் கேட்டவர்களும் மனம் உருகுவர். ஆளுல். நீ சிறிதும் என்னேக் குறித்து மன இரக்கம் கொள்ளவில்லையே, இவ்வாறு நீ இருப்பது உன் பெருந்தன்மைக்கு அழகாகுமா?* (στ - Φ. .)

(அ - சொ.) தண்டாத - நீங்காத தாரணி - உலகம். (ஈண்டு உலக மக்கள்) திங்கள் துண்டு - பிறைச் சந்திரன். துய்மை சுத்தம். அண்டார் . தேவர். ஆர் - ப்ொருந்திய, (இ . கு.) அண்டர் என்பது எதுகை நோக்கி அண் டார் என் ருயது நீட்டல் விகாரம். அழகே என்பதன் ஏகாரம் வி.ை

(வி - ரை.) அண்டார் என்பதற்கு நெருங்காதவர் என்று பொருள் கூறினும் பொருந்தும். கங்கை உலகை அழிக்கும் வேகத்தோடு வந்தபோது, அதனைச் சிவபெருமான் தன் சடையில் ஏற்று அதன் வேகத்தை அடக்கினர். தட்சன் சாபத்தால் சந்திரன் தன் பதினறு கலைகளையும் இழக்கும் நிலையில், பதினைந்து கலைகளும் இழந்து ஒரு கலையுடன் சென்று சிவபெருமான அடைய, அவர் அவனைத் தம் சடையில் அவ்வொரு கலையையும் அவன் இழக்காதபடி காத்தார். இந்த இரு வரலாற்றுக் குறிப்பே கங்கை திங்கள் துண்டு ஆர் மலர்ச்சடை என்னும் தொடரில் அமைந்துளது. (4)

பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண் ஐயாஎன் உள்ளம் அழல் ஆர் பெழுகொத் தழிகின்றதால் பையார் அரவம் மதிச்சடை யாய்துெம் பவளநிறச் செய்யாய் எனக்கருள் செய்யய் எனில்ன்ன் செய்குவனே?