பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3 திருவருட்பா

(பொ. ரை) முக்கண் படைத்த முதல்வா! பட முடைய பாம்பைச் சந்திரனுடன் சடையில் வைத்துள்ள இறையவனே! சிவந்த பவளத்தைப் போன்ற செந்நிறம் படைத்த திருமேனி யுடையவனே! பொய்யும் பித்த லாட்டமும் நிறைந்த உலகில் அகப்பட்டுக்கொண்டு, அதனுல் துயரம் மிக, என் மனம் தீயில்பட்ட மெழுகு போல உருகி அழிகின்றது. இந்த நிலையில் நீ எனக்கு அருள் செய்யவில்லை என்ருல், நான் என்ன செய்வேன்?’ (ள். து.)

(அ - சொ.) பை - படம். அரவம் - பாம்பு. மதி - சந்திரன். முன்னுள்ள செய்யாய் - என்பதற்குச் செந்நிறமுடை யோய் என்பது பொருள். அடுத்துள்ள செய்யாய் என்பதற். குச் செய்யவில்லை என்பது பொருள்.

(இ . கு.) அழிகின்றது-ஆல் எனப் பிரித்து ஆல் என் பதை அசைச் சொல்லாகக் கொள்க. ஏகாரம் ஈற்றசை.

(வி. ரை.) சந்திரனும் பாம்பும் ஒன்றுக்கொன்று பகை யுடையன. (அதாவது இராகு கேதுவாகிய பாம்புகள் சந்திரனைக் கிரக காலங்களில் பற்றிச் சந்திரனின் ஒளியைக் குறைக்கின்றன என்பதாம்) ' அத்தகைய பொருள்களையும் ஒன்று படுத்தி வைத்துள்ளனயே’ என்று கூறி இறைவனது அருள் ஆற்றலை வியந்தவாரும்.

சிவபெருமான் தாருகா வனத்து இருடிகள் ஏவிய பாம்பை, ஏற்று அவற்றைத் தன் உடம்பில் அணிந்துகொண்டான் என் பது புராண கதை. நஞ்சுடைய பாம்பை ஏற்றருளியது போல என்னையும் ஏற்றருளக் கூடாதா என்பது நமது ஐயாவின் வேண்டுகோள். (5)