பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையிடு 8

விடம்மிலை ஏர்மணி கண்டாநீன் சைவ விரதம்செய்யத் திடம்.இலை யேஉள் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின் நடம்.இலை யேஉன்தன் நண்பிலை யேஉன நாடுதற்கோர் இடம்.இலை யேஇதை எண்ணிலே யேசற் றிரங்கிலேயே !

(பெ . ரை.) திருப்பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு, அதனைக் கழுத்தில் தங்கவைத்த அழகிய நீலகண்ட மூர்த்தியே! உன் அருளைப் பெறுதற்குத் துணையாக இருக்கும் சிவராத்திரி விரதம், சோமவார விரதம் முதலான சைவ நோன்புகளை மேற்கொள்ள எனக்கு உடல் வன்மை இல்லையே. என் மனத்தில் நிறைவு என்பதும் இல்லையே. என் மனத்தில் நீ செய்யும் ஆனந்த நடனக் காட்சி தரிசனம் ஆகவில்லையே. உன்னிடம் எனக்கு விருப்பம் ஏற்பட வில்லையே. உன்னை அணுகி ஈடேறுவதற்கு எனக்கு வழிவகை தெரியவில்லையே. இவ்வாறன என் இரக்கமான நிலையினைப்பற்றி நீ சற்றேனும் என்மேல் இரக்கங்கொள்ள வில்லையே. இது முறையோ?" (எ . து.)

(அ - சொ.) மிலை . தங்கவைத்த. ஏர் - அழகு. மணி - நீலமணி. கண்டம் - கழுத்து. செறிவு - நிறைவு. நடம் - நடனம். நட்பு - சிநேகம், விருப்பம்.

(இ . கு.) ஏகாரங்கள் அசைகள்.

(வி - ரை.) தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பைக் கயிருகவும், மைந்தாக மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பு விடத் தைக் கக்கியது. அதனைக்கண்ட பிரமன், திருமால்,முதலான தேவர்களும், அசுரர்களும் அஞ்சி ஒடியபோது.சிவபெருமான் அந்த விடத்தை உண்டு தேவர்களே க் காத்தனர். 'கொடிய விடத்தை உண்டு தேவர்களைக் காத்த இறைவாt என்னையும் ஏற்றுக் காக்கக்கூடாதா?'என்பது நம் ஐயா வின் வேண்டுகோள் ' (6}