பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருலருட்யா

விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய் தி மேவுசடைக் கண்ணுடை யாப்நெற்றிக் கண்ணுடை யாய்அருள்கண்ணுண்ட்யாய் பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருள் பெண்ணுடை யiய்வத்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே !

(பொ. ரை.) ஆகாயத்தை இடமாக உடையவனே! வெள்ளி மலையினை இடமாகக்கொண்டவனே! சந்திரனைச் சடையில் சூடியவனே! நெற்றியில் கண்8ணப் பெற்றவனே! அருள் பார்வை யுடையவனே! இசைவடிவாய் இருப்பவனே! திசைகளையே பட்டாடையாக உடுத்தியவனே! இடப்பக்கத் தில் அருளே வடிவாயுள்ள பார்வதி தேவியை உடையவனே! வந்திக் கிழவியின் பிட்டை வாங்கி உண்டவனே! என் செல்வமே!" (எ து.)

(அ - சென்.) விண் - ஆகாயம். வெற்பு - மலை. பண் . இசை, இடப்பால் - இடப்பக்கம்.

(இ - கு.) சடைக்கண், இடப்பால் என்பவற்றுள் உள்ள கண்பால் இரண்டும் ஏழாம் வேற்றுமை உருபுகள்.

(வி . ரை.) இறைவன் பரவெளியில் விளங்குதலின் விண் னுடையாய் எனப்பட்டான். இறைவன் இசை வடி வினன். சுந்தரரும் 'ஏழிசையாய், இசைப்பயனுய்” என்று கூறியதையும் காண்க. இறைவனுக்கு ஆடை திசைகளே. இது குறித்தே அவன் திகம்பரன் என்றும் கூறப்படுவான். திக்கு + அம்பரம், அம்பரம் ஆவது ஆடை, இறைவியின் திரு மேனி ஏனய உலகப் பெண்களைப் போலவோ, தெய்வமங்கை யரைப் போலவோ எலும்பு, தேசல் முதலியவற்ருல் ஆனது அன்று. அவளுக்கு அருளே திருமேனியாக அமைந்துளது. 'அருளது சக்தியாகும்' என்பது சிவஞான சித்தியார், ஆகவே, அருள் பெண்’ என்று இங்கு உணர்த்தப்பட்டது.