பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு Ꮠ↑

மதுரை வைகை யாற்றில் வெள்ளம் பொங்கியது. அதல்ை கரைகள் உடைப்பெடுத்தன. கரைகளை அடைக்க மதுரை மக்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவ்வூரில் இருந்த வந்தி என்னும் தொண்டு கிழவி தன் பங்கை அடைப் பதற்கு ஆளே அனுப்ப இயலாமல் திகைத்தாள். அவளுக்கு உற்ருள் உறவினர் இல்லை. அவள் பிட்டு விற்று. வாழ்ந்தவன், இந்நிலையில் மதுரைச் சொக்கலிங்கப் பெருமான் வந்தியின் பொருட்டுக் கூலியாளாக வந்து வந்திக்கிழவி கொடுத்த பிட்டையே கூலியாகக் கொண்டு கரையினே அடைக்க முற் பட்டனர். இந்த வரலாறே வந்திப் பிட்டுடையார்” என்னும் தொடரில் அமைந்துளது. இதன் முழு வர லாற்றைத் திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில் காண்க. இவ்வளவு எளிமையுடைய இறைவர், என் பொருட்டும் இரக்கம் காட்டக்கூடாதா ? என்பது நமது வள்ளலாரின் வேண்டுகோள். இப்பாட்டு முழுமையும் இறைவனே விளித்த அமைப்பில் அமைந் துள்ளது. (7)

விடையுடை யாய்மறை மேல்உடை யாய்நதி மேவியசெஞ் சடையுடை யாய்கொன்றைத் தசருடை யாய்கரத் தாங்குமழுப் படையுடை ய4ல் அருள் பண்புடை யாய்பெண் பரவையின்பால் நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.

(பொ. சை.) "இரடப வாகனத்தையுடையவனே! வேதத் தின் உச்சியில் விளங்குபவனே! கங்கை ஆறு பொருந்திய சடையுடையவனே! கொன்றை மாலையை அணிந்தவனே! கையில் மழு என்னும் ஆயுதத்தைத் தாங்கியவனே! அருள் குணம் கொண்டவனே! பரவை நாச்சியர்ரின் ஊட8லத் தீர்க்க அவ்வம்மையார் மாளிகைக்கு இருமுறை நடந்த வனே! அருளாகிய சிவலோகத்தை யுடையவனே! உன் திருவடிப் பேற்றை என்க்கு அருள் வாயாக. (எ . து.)